கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் உருவம் பதித்த ஜாக்கெட் அணிந்து, பெண் சேர்மன் நிகழ்ச்சிக்கு வந்தது பேசு பொருளாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படப்பை பகுதியில், பள்ளிக்கல்வித் துறையின் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவில், அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட முக்கிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.விழாவிற்கு வந்திருந்த மக்கள் பிரதிநிதிகளில், குன்றத்தூர் ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன் அணிந்திருந்த ஜாக்கெட், பலரது கவனத்தை ஈர்த்ததுடன், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சரஸ்வதி மனோகரன் அணிந்திருந்த ஜாக்கெட்டின் இரண்டு கைகள் மற்றும் முதுகு பகுதிகளில், கல்விக் கடவுள் சரஸ்வதி தேவியின் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் புகைப்படத்தில் சரஸ்வதி தேவியின் உருவத்தில், ஒன்றிய சேர்மன் சரஸ்வதியின் முகமே இடம் பெற்றிருந்தது தான் அதிர்ச்சியை உண்டாக்கியது.விழாவுக்கு வந்திருந்த ஒரு சில பார்வையாளர்கள், இந்த வினோதமான உடையைப் பார்த்து முகம் சுளித்த விட்டு சென்றனர்.புடவையில் இப்படிப்பட்ட உருவம் பொருத்திருந்தால் கூட ஒரு விதத்தில் ஏதோ ஏற்றுக்கொள்ளப்படும், ஆனால் ஜாக்கெட்டில் கல்விக் கடவுள் புகைப்படம் பொருத்தி இருந்ததை காணும்போது, ஏராளமானோர் அவருடைய ஜாக்கெட்டையே பார்த்துக் கொண்டிருந்தது ஒரு விதமான ஆபாசத்தை வெளிப்படுத்தும் வண்ணம் இருந்ததாக பெண்களே குற்றம்சாட்டினர்.









