தமிழகத்தில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்..!!

மிழகத்தில் சென்னை, கோவை, உதகை, திருப்பூர், குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் இன்று ஓணத்தை உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்.

மலையாள மொழி பேசுவோர், ஓணம் பண்டிகையை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஆன்மிக வரலாற்றின் அடிப்படையில், மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக, ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில், மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்.

பத்துநாள் கொண்டாட்டத்தின் நிறைவாக, வீட்டு வாயில்களில் இன்று வண்ணப் பூக்களால் அத்தப்பூ கோலங்களிட்டு, புத்தாடை உடுத்தி, குடும்பத்தினருடன் கூடி அறுசுவை உணவு உண்டு மகிழ்கின்றனர். இதையொட்டி, கேரளாவின் பல்வேறு இடங்களில் ஆடல், பாடல், விளையாட்டுகளும் களைகட்டும்.

தமிழகத்தில் சென்னை, கோவை, உதகை, திருப்பூர், குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் இன்று ஓணத்தை உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்.