கோவை பீளமேடு செங்காளியப்பன் நகரை சேர்ந்தவர் பார்வதி முத்து. இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 19 ) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களாக மருத்துவமனைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று அங்குள்ள தனது தோழியை பார்ப்பதாக வீட்டில் கூறிவிட்டு ...

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை தினத்தில் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து வருகிறது .இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7:மணி முதல் 8 மணி வரையிலும் என ...

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு மின்மாற்றியில் பிற்பகல், மின்வாரிய ஊழியா் ஒருவா் இணைப்புகளை சரிசெய்து கொண்டிருந்தாா். அப்போது, அவரது கால் மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் காலில் பலத்த தீக்காயமடைந்த அவா் கீழே இறங்க முடியாமல் மின்கம்பத்திலேயே சாய்ந்த நிலையில் தொங்கினாா். இதை கண்ட சக ஊழியா்கள் மின் இணைப்பைத் துண்டித்து, காயமடைந்த ...

புதுடில்லி: உச்சநீதிமன்ற செய்தியாளர் பணிக்கு சட்டம் படிப்பு தேவையில்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.உச்சநீதிமன்றம் தொடர்பான செய்திகள், முக்கிய அறிவிப்புகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்காக செய்தியாளர்கள் அல்லது நிருபர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நியமனத்திற்கு சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றிருப்பது நிபந்தனையாக இருந்து வந்தது. இதனை தளர்த்தி தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, ...

கோவை பீளமேடு சித்ரா, அழகு நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44) நேற்று அவரது வீட்டின் முன் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மனைவி சுகுணா பீளமேடு போலீசில் புகார் ...

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் ஏராளமான நகை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. கடந்த பல வருடங்களாக இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து வருவதாக ஜிஎஸ்டி துறையினருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கடத்தல் தங்கத்தையும் இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதையடுத்து ஜிஎஸ்டி துறையின் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு ஆணையர் ஆபிரகாம் தலைமையில் நேற்று முன்தினம் மாலை ...

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் (பிரிவு A & B அதிகாரிகள்) வருடாந்திர இரகசிய அறிக்கை (ACR) அல்லது வருடாந்திர செயல்திறன் மதீப்பீட்டு அறிக்கையானது (APAR) இதுவரை காகிதவடிவில் தயாரித்து, செயல்படுத்தப்பட்டுவருகின்றது. இந்த வருடாந்திர இரகசிய அறிக்கையானது காவல் அதிகாரிகள் தங்கள் பணிகாலத்தில் பல்வேறு நிர்வாக செயல்முறைகளான பதவி உயர்வு, அயல்பணி, பதக்கங்கள் ...

கோவை இருகூர் அருகே உள்ள ஏ. ஜி. புதூர் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலன். அவரது மகன் சுதீப் ( வயது 8) அங்குள்ள தொடக்கப்பள்ளி கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று ஏ.ஜி. புதூர், அய்யாசாமி கோவில் குட்டைக்கு குளிக்கச் சென்றான்.குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி ...

கோவை சுந்தராபுரம் ,செங்கப்பக் கோனார் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 67 )இவர் சாயிபாபா காலனி என். எஸ். ஆர். ரோட்டில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது கடையில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் கடையிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. சேதமதிப்பு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும். மின் கசிவு ...

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு என்று இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லை. எனவே பொழுதுபோக்கிற்காக ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் உள்ள பச்சைமலை மற்றும் ‘டாப் செங்காட்டுபட்டி’ ஆகிய மலை கிராமங்கள் நல்ல இயற்கை அழகுடன் காணப்பட்டாலும் அங்கு சுற்றுலா செல்லும் அளவிற்கு ...