கோவை : சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணியின் நீர் பிடிப்பு பகுதியில் 31 மி. மீட்டர் மழையும் அடிவாரத்தில் 10 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து 44 அடியை தொட்டது. ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சென்னமலை ரோட்டில் உள்ள சிராஜ் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55) டிரைவர். இவரது மனைவி 22 ஆண்டுகளுக்குப் பின்பு கர்ப்பமானார். இந்த நிலையில் நேற்று அவருக்கு வீட்டில் வைத்து திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் வீட்டில் உள்ள பாத்ரூமுக்கு சென்றார். அங்கு வைத்து அவருக்கு அழகான ஆண் ...

திருச்சி மன்னாா்புரம் அணுகு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந.காமினி திறந்து வைத்தாா். தஞ்சாவூா் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் – டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையா் சிலை, சேவா சங்கம் பள்ளி, பென்வெல்ஸ் சாலை, அலெக்ஸாண்டிரியா சாலை வழியாக சோனா-மீனா திரையரங்கம் எதிரில் உள்ள தற்காலிக ...

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி.வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவெறும்பூர் கொள்ளிடம் சமயபுரம் முசிறி துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு வசதி செய்யப்பட்டு பொதுமக்களிடம் திருடுபவர்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சாதாரண உடையில் போலீஸாரும் ...

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில் மாணவிகள் 39 பேர் மயக்கம் அடைந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நேற்று காலை திடீரென வாயுநெடி பரவியது. இதில் மாணவர்களுக்கு ...

இன்று அக்டோபர் 26ம் தேதி தமிழகம் முழுவதும் சிலிண்டர் டெலிவரிமேன்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். கேஸ் ஏஜென்ஸிகளின் கீழ் சிலிண்டர் டெலிவரி செய்யும் டெலிவரிமென், மெக்கானிக், டிரைவர்கள், குடோன் கீப்பர், லோடுமேன்கள், பணியாளர்கள் என பலரும் வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை பல்வேறு தருணங்களில் முன்வைத்து வந்த நிலையில், ...

புதுடெல்லி: ரத்தன் டாடா எழுதி வைத்த உயில் விவரங்கள் வெளியான நிலையில், அதில் தனது சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கும் அவர் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார். இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா கடந்த 9-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில், அவர் எழுதி வைத்த உயில் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரத்தன் டாடாவுக்கு ...

பெங்களூரில் இருந்து கோவை நோக்கி காரில் வந்துக் கொண்டிருந்த 3 கல்லூரி மாணவிகள், நேற்று நள்ளிரவு அவிநாசி அருகே வந்துக் கொண்டிருந்த போது லாரி மீது பயங்கர வேகத்தில் மோதி, கார் அப்பளமாய் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 கல்லூரி மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். இதில் 2 ...

போபால்: மனித உரிமை மீறலைத் தடுக்க மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் அனைத்து அறைகளிலும் மூன்று மாதங்களுக்குள் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள பாலுமடா ...

பெங்களூரு: கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை தீவைத்து கொளுத்திய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி அடுத்த மரகும்பி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (42). இவர் அங்குள்ள திரையரங்கில் ...