சுனிதா வில்லியம்ஸ் மிக நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பதால் , அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஏவப்பட்ட போயிங் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களுக்கு வீரர்களை அழைத்துச் செல்வதை சோதனை செய்யும் வகையில், இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர் ...
மணிப்பூரில் கலவரம் தொடங்கி ஒன்றரை ஆண்டைக் கடந்தும், கலவரத்தின் பதற்றமோ அல்லது மணிப்பூர் மக்கள் ஆட்கொண்டிருக்கும் வஞ்சிப்போ நீங்கப்படவில்லை. இஸ்ரேல் – காஸா, ரசியா – உக்ரைன் என மற்ற நாடுகளுக்கு இடையே நடைபெறும் போருக்கு கருத்து தெரிவிக்கவும், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவும் நேரம் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மோடி, ...
கோவை மாவட்டம் அன்னூர், ஒட்டர் பாளையம்,பக்கம் உள்ள பூலுவபாளையத்தை சேர்ந்தவர் பிரதீப் ( வயது 38 )ஏ.சி. மெக்கானிக்.இவர் நேற்று முன்தினம் விளாங்குறிச்சி ரோடு காந்தி வீதியில் உள்ள தினேஷ் என்பவரது வீட்டில் ஏ.சி.மிஷின் பழுது பார்க்க சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் ...
கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள டி. வி. எஸ் .நகர் 3 -வது வீதியைச் சேர்ந்தவர் கார்மேகம். இவரது 17 வயது மகன். ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை கார்மேகம் கவுண்டம்பாளையம் ...
“அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எங்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள்” நவம்பர் 16ம் தேதியான இன்று நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது ..தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் ...
கோவையை சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் . இவர் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ...
நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 19 குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு திருச்சி மாநகரம் இடமலைப்பட்டி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி ...
தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தென் தமிழகம் மற்றும் அதன் அருகில் இருக்கும் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (15.11.2024) தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை பெய்யக்கூடும் என ...
திருவனந்தபுரம்: ‘அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது. வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கேரளா ஐகோர்ட் தடை விதித்தது. கேரளாவில் நடக்கும் அணிவகுப்பில், யானைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து கேரளா ...
காற்று மாசு காரணமாக, டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் காற்றின் தரமும் மோசமாகி வருகிறது. கடும் கட்டுப்பாட்டுகளை மீறி தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், டெல்லியில் காற்று மாசு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. டெல்லியில் ...













