திரையரங்க வளாகங்களில் ரசிகர்களிடம் பேட்டி எடுக்க யூடியூப் சேனல்களை அனுமதிக்கக் கூடாது என அண்மையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதால் இவரது இந்தக் கருத்துக்கு ஆதரவு பெருகியது. இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. ...
நீலகிரி மாவட்ட உதகையில் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 14.11.2024 முதல் 20.11.2024 வரை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடைபெற்ற வார விழாவின் கடைசி நாளான 20.11.2024 கோத்தகிரி பேருந்து நிலையம் அருகில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நீலகிரி கூட்டுறவு நிறுவனம், கோத்தகிரி மலைவாழ் பழங்குடியினர் ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளகிணறுஅம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி பொன்னம்மாள் ( வயது 55) இவர் நேற்று துடியலூர் – சரவணம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது .இதில் பன்னம்மாள் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இது ...
மதுரை மாவட்டம் மேலூர் பக்கம் உள்ள கரையான் பட்டியைச் சேர்ந்தவர் நாகூர் கனி ,இவரது மகன் அப்துல் சையத் (வயது 19 )இவர் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள கணபதி சில்க்ஸ் துணிக்கடையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார் .நேற்று துணிக்கடையின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ...
திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் நினைவு அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் காது கேளாத ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கண்டறிவதற்கான காது கேளாமை சிறப்பு பரிசோதனை முகாமினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். நிகழ்வில் கி.ஆ.பெ விஸ்வநாதன் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரவேல் மருத்துவமனை கண்காணிப்பாளர் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் செல்லும் ஊசிமலை கைகாட்டி அருகே மற்றும் அக்கா மலை எஸ்டேட் ஊமையாண்டி முடக்கு ஆகிய பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சாலையோரங்களில் அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்து அவ்வழியாக செல்லும் பேருந்து மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலை குறித்து சம்பந்தப்பட்ட வால்பாறை ...
கோவை கணபதி கே .ஆர் . ஜி. நகரை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 85) இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக ராம லட்சுமியின் உடல் குளிர் பதன பட்டியல் (ப்ரீசர் பாக்ஸ்) வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கமுள்ள ஆனைமலை, புது விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மாலிக் .இவரது மனைவி அம்சத் ( வயது 40) இவரது கணவர் மாலிக் குடிப்பழக்கம் உடையவர் .இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அம்சத் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு ...
கோவை : ஓசூரில் நீதிமன்ற வளாகத்தின் அருகில் வக்கீல் கண்ணன் என்பவர் நேற்று பட்டப்பகலில் அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு – புதுச்சேரி மாநில வக்கீல்கள் சங்கம் கூட்டுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் வக்கீல்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. தென்னிந்திய வக்கீல்கள் மாநாட்டுக்கு வருகை தந்த தமிழக சட்ட அமைச்சரிடம் வக்கீல்கள் ...
சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை, சிபிஐக்கு மாற்றி சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்திருந்த வழக்கில் இன்றைய தினம் ஹைகோர்ட்டில் இந்த பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமததிக்கப்பட்டனர். ...













