தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் பணிபுரியும் காவலர்களின் மனநல மேம்பாட்டிற்காக 2022 ஆம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திட்டத்திற்கு ரூபாய் 53 லட்சம் நி தி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத் திட்டம் சிறப்பாக நடைபெற்றது.இதில் 1000 காவலர்கள் பயன் அடைந்தனர். இதனை தொடர்ந்து தென் மண்டலத்தில் பணிபுரியும் காவலர் நலனுக்காக ரூபாய் 30 ...
கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள சோலையார் டேம், கல்யாண பந்தல் பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர். கண்டி முண்டா ( வயது 23) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவியுடன் தேயிலை தொழிற்சாலை குடியிருப்பில் தங்கி இருந்தார். குடிப்பழக்கம் உடையவர். இதை அவரது மனைவி கண்டித்தார்.இதனால் மனம் உடைந்த கண்டி ...
கரூர் மாவட்டம் மண்மங்கலம் பக்கம் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்ற தாதா சிவா என்ற சிவக்குமார் (வயது 48)இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2020 ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இவர் சிறையில் 3 – வது பிளாக்கில் உள்ள ...
ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் – திருச்சி ஆட்சியர் மா. பிரதீப்குமாா்!!
ஆடிப்பெருக்கையொட்டி சனிக்கிழமை திருச்சி மாவட்டம் முழுவதும் காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி நீராடி புத்தாடைகள் அணிந்து காவிரித்தாய்க்கு, காப்பரிசி காதோலை கருகமணி உள்ளிட்ட மங்கலப்பொருள்கள் வைத்து படையலிட்டு வழிபடுவது வழக்கம். இதேபோல புதுமண தம்பதியினா் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி தாயை வணங்கி புது மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வாா்கள். இதேபோல ஞாயிற்றுக்கிழமை ...
நம் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்த வகையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது கடந்த மே மாதம் 5ந் தேதி நடைபெற்றது.அதன்பிறகு ரிசல்ட் வெளியானது. ரிசல்ட் வெளியான நிலையில் தான் ...
வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களை நிலச்சரிவு புரட்டிப்போட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 298 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. 4வது நாளாக மீட்புப் பணிகள் ...
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல விஞ்ஞானிகளுக்கு தடை விதித்துள்ளதாக கூறும் செய்தி தவறானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய ...
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45 )பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலையில் அவரது வீட்டில் குளியல் அறையில் குடிநீர் கசிவு ஏற்பட்டதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது 8 அடி உயர சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாட்டுக்குள் ...
கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் முரளி. இவர் 15 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணி செய்து வந்தார்.நேற்று இரவு காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாம்பு புகுந்துள்ளதாக நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் முரளிக்கு தகவல் அளித்துள்ளனர். அந்நிறுவனத்தின் அறையில் புகுந்த பாம்பு பிடிக்க முயலும் போது எதிர்பாராத ...
கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் கடந்த 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 – ந் தேதி பயிற்சி முடித்த போலீசார் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தனர். இவர்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் நேற்று மீண்டும் சந்தித்தனர் . 1984 பிரிவு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் நலச்சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இச்சங்கத்தின் ...













