இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 13 பேர் இன்று சொந்த ஊர் வந்து சேர்ந்தனர்.கடந்த ஜுன் 30 ஆம் தேதி பாம்பனிலிருந்து ஜார்ஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் 7 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ...
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை அவிநாசி ரோடு, ஹோப் கல்லூரி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகே நாளை ( ஞாயிற்றுக்கிழமை) முதல் உயர்மட்ட மேம்பால தூண் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கு நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு ,எஸ். என் ...
கோவை அருகே உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 52) இவர் ராம் நகரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். கோவை ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை ...
கோவை அரசுமருத்துவமனையில் உரிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல், நாளை காலை 6 ...
கோவை மாவட்டம் காரமடை -கரியாம்பாளையம் ரோட்டில் உள்ள சென்னி வீரம்பாளையம் பகுதியில் வேகமாகச் சென்ற கார் திடீரென்று நிலை தடுமாறி மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த பிரஸ் காலனி வள்ளலார் நகரை சேர்ந்த செல்வபாய் ( வயது 72) ஜெய் ஸ்ரீ நகர் சுகந்திகா ( வயது 24) மனோன்மணி ( வயது ...
கோவை சுங்கம் – உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள வாலாங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி செக்யூரிட்டி சூப்பர்வைசர் ரூபன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் ஆக.8 ம் தேதி இரவு பணியில் இருந்தபோது பாலியல் ...
சென்னை: குரங்கு அம்மை நோய் தொற்று குறித்து சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. இதில், தமிழகத்தில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என தெரிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ...
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3-வது மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. செயற்கைக்கோள் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, எஸ்.எஸ்.எல்.வி.யின் வளர்ச்சி நிறைவடைந்ததாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் அறிவித்தார். இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், சிறிய லிஃப்ட் ஏவு வாகனமான எஸ்.எஸ்.எல்.வி-டி ...
கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவரது மகன் செல்வராஜ் ( வயது 27) பாணி பூரி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் தங்கி இருந்த வாடகை வீட்டில் சுவிட்ச் போடும்போது மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார். .இது குறித்து பேரூர் போலீசில் ...












