இந்தியக் கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்ஸ்மேனாக படைக்காத சாதனைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், நூறு சர்வதேச சதங்கள் என அவரின் சாதனைகள் இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிணத்துக்கடவு ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு வெகு சிறப்பாக விளையாடி முதல் பரிசு மற்றும் சுழல் கோப்பையை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். அம்மாணவர்களை ...

  கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் சூலூர் கட்டிட பொறியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. சங்க தலைவராக பொறியாளர் பசுமை நிழல் விஜயகுமார், துணைத் தலைவராக சிற்பி இல.செந்தில் குமார், செயலாளராக தேவானந்தம் பொருளாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். சூலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட பொறியாளர்கள் ...

இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வழித்தோன்றலான மன்னர் என்.குமரன் சேதுபதியின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது இதில் 18 அணிகள் 216 வீரர்கள் பங்கேற்றனர் இந்த விளையாட்டானது மூன்று நாட்களாக நடைபெற்று இறுதிப்போட்டியில் பெரியபட்டினம் அணியும் இராமநாதபுரம் சேதுபதி அணியும் விளையாடின இதில் பெரிய பட்டிண அணி இரண்டு கோள்கள் அடித்து வெற்றி பெற்றது ...

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் யூனியன், திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் 9000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வசிக்கின்றனர். விளையாட்டு மைதானம் இல்லாததால், இளைஞர்கள் பலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களின் வாழ்க்கை முறை மாறுவதாகவும் திருப்பாலைக்குடி ஊராட்சி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு ...

இந்தியாவில் தற்போது IPL திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே கிரிக்கெட் போட்டிகள் மீது அதிக ஆர்வம் கொண்ட ரசிகர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளாக இருந்தாலும் சரி, சர்வதேசப் போட்டிகளாக இருந்தாலும் சரி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமே நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சர்வதேச தரத்தில் இரண்டாவது ...

கோவை மே 20 கோவை செல்வபுரம், கல்லா மேடு, வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரது மகன் அர்ஜுனன் ( வயது 35) இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் போட்டி பார்ப்பதில் சொக்கம்புதூர் அன்னை இந்திரா நகர் ,ராஜா கணேஷ் ( வயது 30) என்பருடன் நட்பு ஏற்பட்டது.இவர் ஐபிஎல் ...

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாகவும், இது குறித்து பிசிசிஐ-யிடம் அவர் தனது முடிவைத் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறார். தனது மனநிலையை பிசிசிஐ-யிடம் அவர் தெரிவித்திருக்கிறார். ...

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் புதிய விளையாட்டு மைதானத்தில் கோடை காலத்தில் முன்னிட்டு இன்றைய இளைஞர்கள் மாணவர்கள் மொபைல் போன் பழக்கத்திலிருந்து போதைப் பொருளில் அடிமையாகாமல் தடுக்கும் விதமாகவும் விளையாட்டு மற்றும் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய இளைஞர்கள், கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக்கவும், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் ...

கோவை மே 3 கோவை போத்தனூர் பக்கம் உள்ள வெள்ளலூர், காமராஜபுரம் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் கிரி பிரசாத் ( வயது 22 )நேற்று இவர் அங்குள்ள மேட்டுத்தோட்டம் பகுதியில் உள்ள மைதானத்தில் தனது நண்பர்கள் நவீன், நிர்மல்ராஜ், லோகேஸ்வரன் ஆகியோருடன்கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிலருக்கும் இவர்களுக்கும் இடையே ...