திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.35 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 ...

அதிக வருமானம் வரக்கூடிய பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்பூரை சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா் உயா்நீதிமன்றத்தில், தாக்கல் செய்த பொதுநல மனுவில், அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ரூ.1000-க்கு மேல் ...

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் 12 கோயில்கள் மாதிரி கோயில்களாகத் தேர்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தமிழக கோயில்களில் தரிசனம் செய்து விட்டு செல்லும் போது ...

சூலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 650 பேர் காசியில் வரும் 16-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ விசாலாட்சி திருக்கல்யாண திருவிழா மற்றும் 1008 மஹா கும்ப தீர்த்த அபிஷேக விழாவில் பங்கேற்கவும், தேங்காய் தொட்டியில் அரைத்து செய்யப்பட்ட கங்கையில் ஆற்றில் விளக்கேற்றி விடும் பக்தர்களுக்கு வழங்க ஒரு கோடி ...

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை மூலமாக ரூ.1.16 கோடி வருவாய் கிடைத்துள்ளது.ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி இரவு வரையிலும் நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் செல்லத்துரை தலைமை ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 851ம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த மே 09ந்  தொடங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்வான  சந்தனக்கூடு திருவிழா நேற்று (மே 21) மாலை 4:30 மணிக்கு யானை, குதிரைகள் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் 1434 ஆம் பசலி ஆண்டிற்கான 2024-2025 வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) கோவை மாவட்ட தாட்கோ மேலாளர் மகேஷ்வரி தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் மோகன் பாபு முன்னிலையில் நடைபெற்றது வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் பட்டா, பட்டா பெயர்மாற்றம், தாட்கோ கடன், வீடு வேண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை ...

வால்பாறை அருகே  அக்காமலை எஸ்டேட்டில் எழுந்தருளி கோவை மாவட்டம் வால்பாறை – அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா வால்பாறை பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில்  வெகு விமரிசையாக நடைபெற்றது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் அமுல் ராஜ், மைக்கேல்பாபு, சுரேஷ், ஜான்சன் மற்றும் பங்கு மக்கள் ...

மதுரை: கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா.. கோவிந்தா முழக்கத்துடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். ஆற்றில் இறங்கிய போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டாடினர். ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ...