புதுடெல்லி:பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் குழுவானது ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சங்கத்தின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெற உள்ளது.ரஷ்யாவின் கசான் பகுதியில் வரும் 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெற உள்ள ...

மலைக்கோட்டை பகுதி அதிமுக செயல் வீரர், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில் : அதிமுக பேசி வளர்ந்த இயக்கம். வாய்ப்பு கிடைக்கும் ...

திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது . மேலும் இந்த கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பேசியதாவது வருகின்ற ஒன்பது பத்து ஆகிய இரண்டு நாட்களில் வாக்காளர் பெயர் ...

சென்னை: தமிழக கிராமப்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாநில அரசின் நிதியில்,, முதல் தவணையாக ரூ.209.20 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசு 60% நிதியும், மாநில அரசு ...

புதுடெல்லி: பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளதாகவும், புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைக்க உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். புத்தரின் போதனைகளை கொண்டாடும் சர்வதேச அபிதம்மம் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:- பழமையான பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகிற்கு ...

திருச்சியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்ததில் உதவி ஆய்வாளர் பார்வை பாதிக்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலாளர் உட்பட 20 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவுநடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான ...

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘அதிமுக ஆட்சியில் பல புயல்கள் வந்தன. அப்போது புயல் வேகத்தில் பணியாற்றி மக்களின் பிரச்னைகளை தீர்த்தோம். பிரிந்து கிடக்கின்ற என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அவ்வளவுதான். 6 முக்கிய தலைவர்கள் ...

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்ததால் பெரும்பாலான மக்கள் தமிழ்நாடு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்றும் நாளையும் சென்னை முழுவதும் இருக்கக்கூடிய அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கனமழை காலத்தில் சென்னை ...

ஸ்ரீநகர்: காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்கிறார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கேற்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டும் கூட காங்கிரஸ் அதனைப் புறக்கணித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இன்றைய பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ...

சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தீவிரமடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் ...