டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் மக்களவை சார்பில் வாழ்த்து என அவர் தெரிவித்துள்ளார். ...

சிவகங்கை மாவட்டம் அமமுக நகர செயலாளர் மகள் தாரிணி திருச்சி சமயபுரம் அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்த நிலையில் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் மீது புகார் அளித்திருக்கிறார் மாணவியின் தந்தை பாலாஜி. திருச்சி மாவட்டம் சமயபுரம் ...

திருச்சி மாவட்டம், துவாக்குடி திருவெறும்பூா் வட்டங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனம் படைக்கலன் தொழிற்சாலைகளை நம்பி ஆயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் பெல் நிறுவன ஆா்டா்கள் குறைந்ததால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து சிப்காட் மூலம் தொழில்துறையில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் பூங்காக்களை உருவாக்குவதன் மூலம் சிறு குறு ...

யோகாசனங்களை மேற்கொள்வதன் மூலம் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன. மன அழுத்தம், நீரிழிவை தவிர்ப்பது, உடல் ஆரோக்கியம் , உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைப்பது , நுரையீரல் பிரச்சனைகள், அல்சர் பிரச்சனைகள் , மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் யோகாசனம் செய்வதால் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு ...

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தற்போதும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து ...

சென்னை: தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சபைக்கு வர அனுமதி இல்லை என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்ததனால் மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வர அனுமதி கொடுத்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் செய்யப்பட்ட பிறகு ...

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பதற்றமான நிலை நீடிக்கிறது. இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்ட்ம இன்று காலை தொடங்கியது, கேள்வி நேரத்தின் ஆரம்பிக்கும் போதே அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரச்சனையை எழுப்பினர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம், முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பினார். ...

சென்னை: ‘தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள ...

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், கடந்தாண்டு மே மாதம் விழுப்புரத்தில் கள்ளச் சாராயத்தால் 23 பேர் உயிரிழந்தனர். இந்த ...

திமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. இவர் திமுகவில் பயணித்து வந்தார். திமுகவில் இருந்தவரை கனிமொழி எம்பியின் ஆதரவாளராக அறியப்பட்டார். அதன்பிறகு அவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து கொண்டார். பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக உள்ளார். அதோடு பாஜகவில் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில ...