திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனையின் பேரில் பூந்தோட்டம் காஜா பேட்டை மெயின் ரோட்டில் கிழக்கு மாநகர பாலக்கரை பகுதி திமுக சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாலக்கரை பகுதி கழகச் செயலாளர் டிபிஎஸ்எஸ் ராஜ் முஹம்மது தலைமை தாங்கினார். ஐம்பதாவது வட்டக் கழக செயலாளர் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். ...

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்று உள்ளது. இன்று காலை திருச்சியிலும், மாலை கரூரிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக 69 சதவித இட ஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டு உள்ளது. அதில் 18 சதவிதம் ...

அடுத்த ஒரு வாரத்தில் 5ஆயிரம் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடக்கும் என்றும்; செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும் வரை பாஜக தொடர்ந்து போராடும் எனவும் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறுகையில், ”டெல்லியிலும் சத்தீஷ்கரிலும் மதுபான ஊழல் நடந்தது. டெல்லி ...

தமிழகத்தில் இப்போதே தேர்தல் அரசியல் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 ம் தேதி நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக பொதுச் ...

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் காந்திமார்க்கெட் ஸ்ரீ மீனாட்சி மகாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு முன்னதாக டிடிவி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக ஆட்சி காலத்தில் அறிவியல் பூர்வமான ஊழல்கள் நடைபெறுவது ...

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை(மார்ச்.15) தாக்கல் செய்து வருகிறார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார். நிதிநிலை அறிக்கையில் பல்வேறு ...

இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ என பெயரிடப்பட்ட சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் ...

ஐரோப்பாவிலிருந்து வரும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவிலிருந்து வரும் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது. இதற்குப் பதிலடியாகவே டிரம்ப் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் 50% வரி விதிக்கப்போவதாக அறிவித்திருந்தது. டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதைப் பற்றி ...

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2025-2026-ம் ஆண்டுடிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் அதிமுக அமளியில் ஈடுப்பட்டு வெளிநடப்பு செய்திருக்கிறது. செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் சட்டசபைத் தலைவராக இருந்த தனபாலை பதவி ...

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. திமுக அரசின் செயலற்ற ...