சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக 7 மண்டல பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் முக்கிய தளபதியாக இருப்பவர் செந்தில் பாலாஜி, அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த உடன் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து ...
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை வரவேற்கும் விதமாக திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கினை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் ...
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடி இன்று அதிகாலையில் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்றார். அங்கு துணிச்சலான விமானப்படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். இந்தியா – பாகிஸ்தானிடையே நிலவிவந்த போர்ப் பதற்றம் பல நாடுகளைத் திரும்பிப் ...
டெல்லி: ஆபரேஷன் சிந்தூரை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. கடந்த ...
அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார், நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா உடன் இருந்தார், மற்றும் அரசுத்துறை முக்கிய அதிகாரிகள் மற்றும் கழகத்தின் நிர்வாகிகள் உள்ளனர், ...
வாஷிங்டன்: வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்கியதால் இருநாடுகள் இடையே போர் மூண்டது. 4 நாட்கள் நடந்த சண்டை கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியுடன் ...
அதிமுக பொது செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, திருக்கோவில் திருப்பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சர் முனைவர் செ.ம. வேலுச்சாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கந்தசாமி ஆகியோர் ஏற்பாட்டில் திருக்கோவில் மண்டல பூஜையை ஏற்று கலச வேள்வி வழிபாட்டுடன் சிறப்பு அபிஷேகம் ...
தனது 22 நிமிட உரையில், பிரதமர் மோடி பாகிஸ்தான் முதல் அமெரிக்கா வரை அனைத்தையும் உள்ளடக்கியிருந்தார், முழு உரையையும் வாசித்தார். புத்த பூர்ணிமாவை நாளான இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைக் குறிப்பிட்டு, பாகிஸ்தானுக்கு எதிரான துல்லியமான ராணுவ நடவடிக்கைக்காக நாட்டின் பாதுகாப்புப் படைகளைப் ...
கோவை மே 12 நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது .இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3-ஆம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது. ஊட்டி ரோஜா ...
ராமநாதபுரத்தில் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏற்பாட்டில் மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் தலைமையில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அதிமுக மருத்துவர் அணி சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. ...












