அரசியலமைப்புக்கும், அரசியலமைப்பு சபைகளுக்கும் நான் தலைவணங்குகிறேன். மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த தினம் இன்று. அப்போது உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இந்தியாவின் பாதுகாப்புக்கு சவால்விடும் பயங்கரவாத அமைப்புகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்ற இந்தியாவின் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை பார்த்தோம்.
ஜனநாயகம் முன்பு எழுந்த சவாலை அரசியலமைப்பு எதிர்கொண்டது. இதுதுான் நமது அரசியலமைப்பின் பலம். காஷ்மீரில், அம்பேத்கரின் அரசியலமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்முறையாக காஷ்மீரில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.அரசியலமைப்பின் அசல் புத்தகத்தில் கடவுள் ராமர், சீதையின் உருவங்கள் அதில் உள்ளன.
இந்த படங்கள் இந்திய கலாசாரத்தை பிரதிபடுத்துபவை. இவை எப்போதும் மனித மாண்புகளை நினைவுபடுத்துகிறது. இந்த மாண்புகளே இன்றைய இந்தியாவின் கொள்கை மற்றும் முடிவுகளுக்கு அடிப்படையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.நினைவுப்பரிசு திஹார் சிறையில் உள்ள கைதி வரைந்த ஓவியத்தை, பிரதமர் மோடிக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நினைவுப்பரிசாக வழங்கினார்.