கரூரில் ரூ.38.50 கோடி மதிப்பீட்டில், ஐந்து தளங்களுடன் 64,000 சதுர அடி பரப்பளவில், நான்கு தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். ஓராண்டுக்குள் பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதனால், உள்ளூர் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். சி.பி.ஐ சம்மன் வழங்கியிருப்பது குறித்து கேட்க்கிறீர்கள். டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ...

 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். திருச்சியில் மார்ச் 11, 2026 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் திருச்சி வந்தார். முன்னதாக அரசு விழாவில் பங்கேற்ற அவர் 6 புதிய ரயில் சேவைகள், 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை ...

சென்னை: நாளை மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்க உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். கடந்த 2021 செப்டம்பர் 18ம் தேதி தமிழகத்தின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். ஆளுநராக பதவியேற்றது முதல் தமிழக அரசுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துவந்தார். குறிப்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் ...

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று தவெக போராட்டம் நடத்த உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 ...

கரூா் கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பான விசாரணைக்காக தில்லியில் சிபிஐ அலுவலகத்தில் மாா்ச் 15-இல் ஆஜராக தவெக தலைவா் விஜய்க்கும், மாா்ச் 17-ஆம் தேதி ஆஜராக முன்னாள் அமைச்சா் வி.செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பங்கேற்ற ...

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கற்றனைத் தூறும் அறிவு’ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு புதுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வி கட்டமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி தேசிய அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ...

நாடு முழுவதுமே தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியிருக்கிறது. தமிழகத்தைப் போலவே அஸ்ஸாம் மாநிலத்திலும் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அரசு சுமார் 40 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.9,000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.இந்த தொகையில் மாதாந்திர உதவித்தொகையுடன் ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் ...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ...

புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் நாடு முழுவதும் ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வயல்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி ...

ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்திற்கு, ஈரானின் புரட்சிகர காவல்படை கடும் பதிலடி கொடுத்துள்ளது. இந்தப் போரை எப்போது முடிக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம்; வெள்ளை மாளிகை அல்ல” என்று ஈரான் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தின் எதிர்காலமும் அதிகார சமன்பாடுகளும் தற்போது தங்கள் கைகளிலேயே ...