பொன்முடியின் பதவி விலகல், தமிழ்நாடு முழுவதும் அதிமுக மக்கள் சக்தியை திரட்டி நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, என அதிமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களைப் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க சிறுமையான பார்வை கொண்ட பொன்முடிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அதிமுக மக்கள் சக்தியைத் திரட்டி நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு ...

தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். சர்ச்சை பேச்சால், அமைச்சர் பொறுப்பிலிருந்து பொன்முடி மாற்றம் செய்யப்பட்டு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், ராஜ கண்ணப்பன், முத்துசாமி ஆகியோரிடம் மாற்றப்பட்டவர்களின் துறைகள் பிரித்து தரப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் கண்டன உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ...

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்துவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பணிகாலத்தில் பெற்ற ஊதியத்தில் குறிப்பிட்டப் பங்கை ஊழியர் மரணிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் வழங்கும் முறை தான் பழைய ஓய்வூதியத் திட்டம். பழைய ஓய்வூதியத் ...

சென்னை: விஜய் தனது கட்சியில் குழந்தைகள் அணி என்பதை தவிர்க்க வேண்டும். கட்சியில் உள்ள குழந்தைகள் விஜய் பின்னால் வந்து படிப்பதை நிறுத்தி விடக்கூடாது என்று தமிழிசை கூறியுள்ளார்.தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு நாம் எல்லோரும் மனம் வருந்தி நின்று கொண்டிருக்கிறோம். நேற்று முன்தினம் ...

சென்னை: திருமாவளவன் ஒரு கூட்டணியில் இருக்கிறார். அவர் எப்படி அதிமுக கூட்டணி கதவை அடைக்க முடியும் என்று பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் 121வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, தமிழக பாஜ சார்பில் அக் கட்சியின் மாநில செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி ...

கோவை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவை வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் ரோடு ஷோ நடத்தியது போலவே, உதயநிதி ஸ்டாலினும் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அவிநாசி சாலை முழுவதும் இரு கட்சிகளின் கொடிகளே நிறைந்திருந்தன. ஏற்கனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக ...

கோவை ஏப்28 தமிழக வெற்றி கழக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் கடந்த 2நாட்களாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அந்த கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் கோவை வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காகவும், பார்ப்பதற்காகவும், கோவை விமான நிலையத்தில் அந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பலர் ...

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் ...

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ‘மோகன் பகவத்’ மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவிக்கையில்,”பகல்காமில் நடந்த தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்களிடம் பயங்கரவாதிகள், அவர்களின் மதத்தைப் பற்றி கேட்ட பிறகு ...

சமீபகாலமாக அதிமுக நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்த செங்கோட்டையன் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு முதல் வரிசையில் இடமளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றார். அண்மைகாலமாக கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்த நிலையில் இன்று கலந்துகொண்டார். ...