சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும், விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என்ற பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.. நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு அந்த விண்கலத்தில் இருந்து ...

நாகப்பட்டினம்மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற தொடக்கப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் , தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும், காலை உணவு திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை ...

செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்திருந்தது. இதனை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை ...

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவரை சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் நேற்று கூறியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொடநாடு வழக்கில் ...

சந்திரயான் 3 திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேலுவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சந்திரயான் -3 இன் லேண்டர் திட்டமிட்டபடி சந்திரனின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் நேற்று (ஆகஸ்ட் 23) தரையிறங்கியதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனைப்படைத்துள்ளது. இந்நிலையில் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேலுக்கு தொலைபேசியில் ...

ஊழலுக்கு எதிராகவும், மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். ...

சென்னை: முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் பகுதியில் தொடங்கி வைக்க வேண்டும் என ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான விவரம் ...

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு முன் ஒரு முழுநேர அரசியல் படத்தை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் கட்சி தொடங்கவும் முழு நேர அரசியல்வாதியாக மாறவும் நடிகர் விஜய்  பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கான வேலைகளையும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கொண்டு ...

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று முன்தினம் அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்த மாநாட்டை லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில், பொதுக்களின் வசாதகிக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் ஆயத்தப்படுத்தப்பட்ட நிலையில், இவர்களுக்கென உணவு வசதிகளும் சிறப்பான முரையில் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ...

ஜொஹன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை வந்தே மாதரம் என முழக்கமிட்டு இந்தியர்கள் ஆரவாரமாக வரவேற்றனர்.. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. 2019 ஆம் ஆண்டு கொரானா பரவலுக்கு பிறகு நேரில் நடைபெறும் ...