திமுக தவிர மற்ற இரண்டு கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது ...
பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பிரசாரம் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கி விட்டன. அந்த வகையில் தி.மு.க., தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ...
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். நிச்சயமாக இந்த தேர்தல் முடிந்த பிறகு, வழக்குத் தொடர்வேன். அதற்கு தேர்தல் ...
சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பது பெரும் தலைகுனிவு என்றும், இதனை தடுக்காத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ...
பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 12 மாநிலங்களுக்கு சென்று 29 திட்டங்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர், மொத்தம் 10 நாட்களில் தமிழகம், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், ...
கோவை மருதமலை முருகன் கோவிலில் 2.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கோவை மருதமலை முருகன் கோவிலில் 2.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் பேருந்து மற்றும் மலை மேல் கோவில் வளாகத்தில் அர்ச்சனை செய்வதற்காகவும் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் மூலம் கிடைக்கும் தொகையை அந்தந்த டிக்கெட் ...
உழவர்களைக் காக்கும் ஒரே கட்சி பா.ம.க என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உணவளித்து உயிர் காப்பவர்கள் உழவர்கள் தான். அதேநேரத்தில் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தாலும், உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் கடனாளி ஆவதும், ...
பெங்களூரு: பெங்களூருவில் ஒயிட் பீல்ட் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் 9 பேர் காயமடைந்தனர். இந்த சூழலில் நிகழ்விடத்தில் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார். ‘இந்த குற்றச் செயலை செய்த நபருக்கு 30 முதல் 35 வயது வரை இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் ...
காவல்துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழகத்தில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப் பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில்: தமிழகத்தில் இரு இடங்களில் இன்று ஒரே நாளில் 180 கோடி ரூபாய் ...
சாதி, மதம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. தேர்தல் தேதி வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ...













