சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வியூகங்களை இறுதி செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) வலுப்படுத்துவதும், திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிவதைத் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக எதிர்ப்பு வாக்குகளை தவெக பிரிக்கிறதோ என்ற கேள்வியும் கடுமையாக நிலவி வருகிறதாம். ...

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், H1-B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியிருப்பது, இந்திய தொழில்நுட்ப துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு, அமெரிக்காவில் தங்கள் வேலைவாய்ப்பு, குடும்பம், மற்றும் எதிர்காலம் என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதேசமயம், இந்த நடவடிக்கை அமெரிக்காவில் ஏன் எடுக்கப்பட்டது என்பதைப் பற்றிய ...

லண்டன்: லண்டன்: இந்தியா – பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நாம் ஒன்றாக வாழ கற்று கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உறவுகளை இயல்பாக்க முடியாது. காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை சிறப்பாக முடியும் என்று யாராவது நம்பினால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். இதனால் இந்தியா சண்டையை விட்டுவிட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சி ...

மதுரை: ஜிஎஸ்டி முறையில் மத்திய அரசு செய்த சீர்திருத்தம் மூலம் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், வரி சீர்திருத்தம் மூலம் ரூ.2 லட்சம் கோடி வரிப்பணம் மீண்டும் மக்களிடமே போய் இருப்பதாகவும் இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு கடந்த ...

பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியா இந்தியாவுடனான இருதரப்பு உறவு, நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமென எதிா்பாா்ப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டாா். அதன்படி, பாகிஸ்தான்-சவூதி அரேபியா ...

கோவையில் நேற்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழகம் போன்ற உற்பத்தி துறை அதிகமாக உள்ள மாநிலம் பலன் பெறும் விதமாக இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் இருக்கிறது. சராசரி மக்கள் பயன்படுத்தக்கூடிய உணவுப் ...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த காஸா போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததால் காஸாவில் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்கி வருகிறது. தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காஸாவில் ...

இன்று நடிகரும், தவெக தலைவருமான விஜய் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 35 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். விஜய் பிரசாரம் மேற்கொள்ள கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ...

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக மளிகை பொருட்களின் விலைகள் மீண்டும் விண்ணை முட்டுகின்றன, இது டொனால்ட் டிரம்ப்பிற்கு ஒரு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு அரசியல் தந்திரம் என்று ஒதுக்கிவிட முடியாது; இது ஒரு யதார்த்தமான பிரச்சனை. கடந்த சில வாரங்களாக, ஒரு நெருக்கடிக்கு பின் மற்றொரு நெருக்கடி என பல நிகழ்வுகள் ...

நாடு முழுவதையும் உலுக்கிய ஒரு பெரிய மோசடியை டெல்லி காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது. தோலேராவில் முதலீடு என்ற பெயரில் ரூ.2,700 கோடி மோசடி செய்த கும்பல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ஜுகல் கிஷோர் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். தோலேரா ஸ்மார்ட் சிட்டி என்பது குஜராத்தில் பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் சமீபத்திய திட்டங்களில் ...