அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில நாட்களாகவே அதிரடி அரசியலை செய்து வருகிறார். அதிரடி என்று சொல்வதை விட அடாவடி அரசியல் என்றும் சொல்லலாம். அவருக்கு பிடிக்காத சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்து வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யும் இந்தியாவிற்கு 500 ...
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் மகாராணியைக் காண இருக்கிறது. தற்போதைய மன்னர் ஆறாம் பிலிப் மற்றும் ராணி லெட்டிசியாவின் மூத்த மகளான 20 வயது இளவரசி லியோனர், ஸ்பெயினின் அடுத்த வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 1800-களில் ஆட்சி செய்த இரண்டாம் இசபெல்லாவுக்குப் பிறகு லியோனர் ...
சென்னை: கர்நாடகாவிலும் இருமொழிக் கல்வியைதான் பின்பற்றிவருகிறோம் என்று அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார். தமிழகத்தில் பன்னாட்டு புத்தகக் காட்சியானது பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னையில் 4-வது ஆண்டாக கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திமுக ...
டெல்லி : தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ இன்று அனுசரிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார். அத்துடன் ...
வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடி வரும் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, அவர் செய்த ஒரு செயல் தற்போது உலக நாடுகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியாவுக்கு அறிவிக்கப்பட்ட போதே, அதனை டிரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறியிருந்தார். டிரம்ப்பைச் ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள். சிவப்புச் சிங்கத்தின் பிறந்த நாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உவகை தரும் ...
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான பணிகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜகவும், திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும், நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ...
சென்னை : பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அதில், “உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள் – தைத்திருநாள் – உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். பச்சரிசி, சர்க்கரை, தித்திக்கும் செங்கரும்பு, புதிய வேட்டி சேலை, ரூ. 3,000 ரொக்கம் என ...
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (புதன் கிழமை)மாலை 5 மணிக்கு ராணுவ விமான மூலம்கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.. பின்னர் காரில் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார் .இன்று இரவு திருப்பூரில் தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) காலை ...
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், நேற்று அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். ...













