இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஜவுளி, காலணி, வாகனங்கள் போன்ற பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் வரி குறைவதால் அதிக வாய்ப்புகள் உருவாகின்றன. இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி ஐரோப்பிய ...

பொங்கல் திருநாளை முன்னிட்டு மட்றப்பள்ளி சந்தையில் மாடுகள், ஆடுகள், கோழிகள் அமோகமாக  3 கோடி ரூபாய் மேல் விற்பனை ஆனது. தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி சந்தையில் மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ...

ஓலா நவீன தொழில்நுட்பத்தில், அதிக திறன் கொண்ட எஸ் ஒன் ப்ரோ 4680 பாரத் செல் பேட்டரி ஓலா பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை காந்திபுரத்தில் உள்ள ஓலா பிரத்யோக விற்பனை மையத்தில், எஸ். ஒன். ப்ரோ4680, பாரத் செல் பேட்டரி வசதியுடன் கூடிய ஓலா ஸ்கூட்டர் அறிமுகம் மற்றும் விற்பனை தொடங்கியது .ஓலா ஏரியா மேனேஜர் ...

பனிப் பொழிவின் காரணமாக,பூக்களின் விலை உயர்ந்து, மல்லிகை பூ கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் நிலவுவதாலும், இரவில் பனிப்பொழிவு காணப்படுவதாலும், பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக மல்லிகை மற்றும் முல்லை பூக்கள், மலரும் முன்பே பனியால் கருகி விடுகிறது. இதனால் ...

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பெண் தொழில் முனைவோர்களுக்கான முக்கிய துறையாக ஒப்பனை கலைஞர்களின் அழகியல் துறை மாறி வருகிறது. இந்நிலையில் தனியார் மையத்தில் பயிற்சி முடித்த ஒப்பனை கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்றது.இதில் பயிற்சி முடித்த பெண்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக, திருமண கோலத்தில் மணமகளுக்கு ...

தமிழ்நாடு உலக நாடுகள் மத்தியில், சாதனை படைக்க வேண்டும் என்ற வேட்கையில் பணியாற்றுகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள  லீ மெரிடியன் தனியார் நட்சத்திர விடுதியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் “TN RISING” முதலீட்டாளர்கள் மாநாடு – 2025 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ...

 கழிவு பஞ்சு விலை உயர்வால், மில்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு அளிக்க முடிவு செய்து உள்ளதாக, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் தெரிவித்து உள்ளனர். இது குறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகளுக்கு பல்வேறு வகையான நூல்களை வழங்கி ...

புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில்துறையினர் உட்பட இந்தியா முழுவதும் இருந்து தொழில்துறையினர் பங்கேற்கும் 350 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய முதல்வர் மு க ஸ்டாலின், உலக தொழில் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ...

டெல்லி: இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் அளவு செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 7 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றமதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பரில் 10.4 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது ஜூலை மாதத்தை விட கிட்டத்தட்ட 63 சதவீதமும் 103 சதவீதமும் அதிகமாகும். Reliance Industries ...

கோவை மாவட்டம் மதுக்கரையில் செயல்படும் சிமெண்ட் தொழிற்சாலை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு புகையிலிருந்து சிமெண்ட் துகள்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், மரம், செடி, கொடிகள் என அனைத்திலும் படிவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கோவை ...