டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.இதற்கிடையே திருப்பூருக்கு நிம்மதி தரும வகையில் முக்கியமான தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது ஜவளி துறைக்கு ஜீரோ வரியை அமெரிக்கா விதிக்கும் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா அமெரிக்கா இடையே ஓராண்டாகவே வர்த்தக மோதல் நிலவி வந்தது. வர்த்தகப் ...

ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஐடி துறையின் எதிர்காலம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளார்.கோடிங் அனுபவமே இல்லாத ஒருவர் ஏஐ உதவியுடன் ஒரு செயலியை உருவாக்கியுள்ளார். மேலும், ஏஐ மாடல்கள் மிகக் கடினமான கோடிங் பணிகளையும் மனிதர்களை விடச் சிறப்பாகச் செய்து முடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நானும் ...

நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கொடிசியா பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி கோவையில் 4 நாட்கள் நடைபெறுகிறது. கொடிசியா பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி,  நான்கு நாட்கள் நடைபெறுகிறது.கோவை கொடிசியா வணிக வளாகத்தில், கொடிசியா பில்ட் இன்டெக் 15-வது பதிப்பு, 2026 கண்காட்சி வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 9-ம் ...

தூய வெள்ளி பொருட்களின் பிரத்தியேக ஷோரூம்  “மஹா மேரு சில்வர்ஸ்”   கோவையில்  பிரம்மாண்டமாக  திறக்கப்பட்டது. கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில், தூய வெள்ளி பொருட்களுக்கான புதிய பிரத்தியேக ஷோரூம் “மஹா மேரு சில்வர்ஸ்” இன்று பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.இந்த புதிய ஷோரூமை, அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி மற்றும் அம்பாள் ஆட்டோ இயக்குனர் சந்தான ...

ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிறுவனம் ‘ஜெனோரா’ என்ற அதிநவீன வில்லாக்கள் கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிறுவனம்,  கோயம்புத்தூர்  கோல்வின்ஸ் பகுதியில், அதிநவீன சொகுசு வில்லாக்களை உள்ளடக்கிய ஜெனோரா என்னும் அழகிய குடியிருப்பினை அறிமுகப்படுத்தி உள்ளது.  ரூ. 113 கோடி மதிப்புள்ள முன்பதிவுகளை பெற்றுள்ளது. ஜெனோரா வில்லா குடியிருப்பு, கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சுமார் 5 கிலோ ...

பொறியியல் மற்றும் MSME வளர்ச்சியை ஆதரிக்கும் மத்திய பட்ஜெட் முயற்சிகளை SIEMA வரவேற்கிறது. உலோக விலை ஏற்ற இறக்கங்களை நிர்வகிப்பதில் தலையிடுமாறு கோருகிறது. இந்தியாவின் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் மற்றும் MSME களை ஆதரிக்கும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல முற்போக்கான மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIEMA) வரவேற்கிறது. ...

விவசாயிகளுடன் பயனுள்ள வேளாண் உற்பத்தி கூட்டணிகளை உருவாக்க, நிறுவனங்களுக்கு KERA அழைப்பு விடுக்கின்றது. உலக வங்கி உதவியுடன் கேரளா அரசு செயல்படுத்தி வரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற  வேளாண்மை மதிப்புச் சங்கிலி நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் , (KERA)உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும்(FPC/FPO) முன்னணி வேளாண்மை வணிக நிறுவனங்களுக்கும்(ABP), இடையே சக்தி வாய்ந்த வேளாண்மை உற்பத்தி கூட்டணிகளை ...

உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும். அமேசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி, இது குறித்து வெளியிட்ட பதிவில், “நிறுவனத்தின் படிநிலைகளைக் குறைக்கவும், அதிகாரத்துவத்தைக் களைந்து உரிமையை ...

பிரேஸில் நாட்டைச் சோ்ந்த உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான எம்ப்ரேயா் உடன் இணைந்து, இந்தியாவின் பிராந்திய போக்குவரத்து விமானத் தயாரிப்பு ஆலையை அதானி குழுமம் நிறுவுகிறது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது. விமானத் தயாரிப்பு துறையில் போயிங் மற்றும் ஏா்பஸ் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய ...

பெண்கள் இன்று எல்லா இடங்களிலும் சாதித்து வருகின்றனர்.பால் பண்ணை முதல் நவீன சிறு தொழில்கள் வரை பெண்கள் தங்கள் ஆளுமையை நிரூபித்து வருகின்றனர். இத்தகைய முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, மத்திய அரசு ‘லக்பதி தீதி’ (Lakhpati Didi) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிதிப் பற்றாக்குறையால் தங்களின் தொழில் தொடங்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு, ...