கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து கோவைக்கு வரும் ஆம்னி பஸ் களில் புகையிலை பொருட்கள் ( குட்கா ) கடத்தப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர்சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் ...
கோவை காளப்பட்டி அருகே உள்ள சுடுகாட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோவில்பாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக காளப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31 )மகேந்திரன் (வயது 41) மதன்குமார் ( வயது ...
கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய ...
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தியவர். இவரை கடந்த 16ஆம் தேதி ஒரு கும்பல் கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள வீட்டுக்கு கடத்திச் சென்றனர்..அங்கு வைத்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் ...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன .அங்கு ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிந்து வருகின்றன. இரவு நேரங்களில் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கிறது . இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர் .இந்த நிலையில் அந்தப் பகுதியில் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் 15க்கும் மேற்பட்ட ...
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 9 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்ட த்தைச் சேர்ந்த மாயன் மகன் பிரபாகரன் (வயது 40) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ...
திருப்பூர் மாவட்டம் கணபதி பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் மாலையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது .அப்போது மர்ம நபர்கள் சிலர் பள்ளியின் உள்ளே அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும், வேதியல் ஆசிரியருமான மாணிக்கம் அங்கு வந்து தட்டி ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, போஸ்டல் காலனியை சேர்ந்தவர் விஸ்வநாதன் .இவரது மனைவி லட்சுமி ( வயது 66) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் வாகனத்தை நிறுத்தி மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல அருகில் சென்றார். கண் இமைக்கு நேரத்தில் அவரது ...
கேரள மாநிலம் திருச்சூர் பக்கம் உள்ள சாலக்குடியில் “பெடரல் ” வங்கி செயல்பட்டு வருகிறது.இங்கு நேற்று மதியம் 2:15 மணியளவில் மேலாளர் பாபு மற்றும் ஒரு ஊழியரும் வங்கியில் இருந்தனர் . மற்றவர்கள் மதிய உணவுக்காக வெளியே சென்றிருந்தார்கள். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒரு ஆசாமி வாகனத்தை வங்கிக்கு வெளியே நிறுத்திவிட்டு முகமூடி மற்றும் கையுறை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 39) இவர் கடந்த 12-ந் தேதி இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி – பாலக்காடு சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போதுஅடையாளம் தெரியாத 4 நபர்கள் திடீரென்று அவரை தாக்கி அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்- ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது ...













