கோவை கரும்பு கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சிறப்புசப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் நேற்று அங்குள்ள என் .பி.இட்டேரி பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்தவர்களிடம் 500 கிராம் கஞ்சா 2 கிராம் போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . ...

சமீப காலமாக பூந்தமல்லி மற்றும் மாங்காடு பகுதிகளில் விபச்சாரம் கொடி கட்டி பறப்பதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு  நுண்ணறிவு பிரிவு போலீசார் அறிக்கை அனுப்பி இருந்தனர். அதன் பேரில் கமிஷனர் சங்கர் ஆவடி மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் ஐமன் ஜமாலுக்கு அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். பூந்தமல்லி அருகே உள்ளது குமணன் ...

கோவைபுதூர் – பேரூர் மெயின் ரோடு போஸ்டல் காலனி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒருவர் ஸ்கூட்டரில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து ஒரு வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார். உடனே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அந்த நபரை மடக்கி ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன் ( வயது 60) மாட்டு வியாபாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அந்த சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுவன் கோவை ...

கோவை கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்தவர் செரின் (வயது 32) இவரை மதுக்கரை மரப்பாலம் நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த ரபீக் ( வயது 35) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 பவுன் நகையும், ரு. 80 ஆயிரம் பணமும் வாங்கினாராம். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து செரின் கரும்புக்கடை போலீசில் புகார் ...

கோவை அருகே உள்ள வடவள்ளி எம்.ஜி . காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 50  ) பிகாம் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். உடல்நல குறைவு காரணமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிலிருந்து வந்தார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது . அதில் ஒரு பிரபல நிறுவனத்தில் முதலீடு ...

சென்னை, அம்பத்தூர், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 70) இவரது பேரன் இக்சிட் (வயது 7) இந்த சிறுவன் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தான். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ஆர் எஸ் புரம் , ராபர்ட்சன் ரோட்டில் உள்ள அஜய் நீரோ கிளினிக் என்ற மருத்துவமனைக்கு ராமச்சந்திரன் தனது பேரனை அழைத்து வந்திருந்தார். ...

கோவை குனியமுத்தூர், ரைஸ் மில் ரோட்டில் கடந்த 9-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் குனியமுத்தூர் இந்து முன்னணி தலைவர் பிரபாகரன் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசினாராம் .இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் அழகு மாரி செல்வம் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ...

ஒடிசா ஆந்திரா மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. டி.எஸ்.பி. ஜெயராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் குமரேஷ்,சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் கோவை ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஓடிசா ஆந்திரா வழியாக கோவைக்கு வந்த ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள இடிகரை ,கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 46) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே புருஷோத்தமன் ( வயது 39 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த ...