சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க மூலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்திவரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி ...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா,போதை மாத்திரைகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கோட்டூர் காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது . இதன் அடிப்படையில் காவல்துறையினர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் ஷேக் ஜாவித் (வயது37) இவர்கடந்த 14-ம் தேதிவீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகப்பட்டினம் சென்றுள்ளார். இந்நிலையில் 16 -ந் தேதி வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் 1 லேப்டாப் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி ...
கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள ஜீவா நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் யாரோ கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கோலப்பொடி பெட்டி, உண்டியல் பணம் ரூ 16, ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் பூசாரி வரதராஜன் (வயது 69) ...
கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று முத்து கவுண்டன் புதூர், ராவுத்தூர் ரோட்டில் உள்ள வயக்காடு தோட்டத்தில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த தங்கவேலு (வயது 67) கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 6 லிட்டர் கள் பறிமுதல் ...
கோவை பீளமேடு சித்ரா விமான நிலைய ரோட்டில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் குடிபோதையில் ஒருவர் சென்றார். அங்கிருந்த ஓட்டல் சப்ளையரிடம் “ஆம்லெட்” வேண்டும் என்று கேட்டார். அவர் ஓட்டல் மூடப்பட்டுள்ளது என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சப்ளையர் இளங்கோவை தாக்கி அங்கிருந்த மேஜை நாற்காலிகளை உடைத்து ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர்பகுதியில் நடிகர் விஜயகாந்த் தோட்டம்உள்ளது .இதன் அருகே பொங்கல் பண்டிகைக்காக பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை இடையர் பாளையத்தை சேர்ந்தவர் பால வெங்கடேஷ் ( வயது 50 )நகை வியாபாரி. இவருக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் பணம் – கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பால வெங்கடேஷ் மீது முத்துக்குமார் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பால வெங்கடேஷ் ...
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 40 வயது பயணி ஒருவர் அரசு பஸ்சில் (1 சி) பயணம் செய்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் பஸ்சினுள் மயங்கி விழுந்தார். இதையடுத்து கண்டக்டர் அந்த பயணியை நடுவழியில் இறக்கி சாலையோரம் படுக்க வைத்து விட்டு பஸ் புறப்பட்டு சென்றது . இதுகுறித்து ...
திண்டுக்கல் மாவட்டம் ,பஞ்சம்பட்டி அருளானந்தர் வீதியைச் சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவரது மகன் பிரின்ஸ் புரோனா ( வயது 19) இவர் கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி அருகில் உள்ள முத்து நகரில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன் தினம் ...













