கோவை மே 14 கோவை போத்தனூர் கணேசபுரம், ருக்மணி நகரை சேர்ந்தவர் முருகேசன் .இவரது மனைவி பிரேமா ( வயது 50) டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கடையிலிருந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றபோது பின்னால் இருந்து பைக்கில் வந்த ...

கோவை மே 14 கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி மலை இருக்கிறது. இதில் 7 மலைகளை கடந்து சென்றால் அங்கு சுயம்புலிங்க ஆண்டவர் வீற்றிருக்கிறார். தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் ...

கோவை மே 14 மதுரையை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 32) கட்டிட தொழிலாளி .இவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு தினேஷ் தனது 2 நண்பர்களுடன் ரத்தினபுரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். அவர்கள் ...

கோவை மே 14 சென்னையில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.அதில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் முதல் இருக்கையில் ஒரு பெண் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் இரண்டாவது படுக்கையில் பயணம் செய்த ஒருவர் பாத்ரூம் செல்வதற்காக கீழே இறங்கினார்.அப்போது அந்த இருக்கையின் சங்கிலி கழண்டு படுக்கை விழுந்தது. இதனால் முதல் ...

சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின் போது துருக்கி மற்றும் சீனா கொடுத்த ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதையடுத்து இந்திய மக்கள் துருக்கி பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர். துருக்கி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. துருக்கியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் ஆப்பிள் இறக்குமதி ...

ஜம்மு: ஜம்மு, ரஜௌரி, பூஞ்ச் ​​மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மீண்டும் புதன்கிழமை(மே 14) மூடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநரகத்தின் உத்தரவில் பள்ளிகள் மூடலுக்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் கூறப்படவில்லை. இதுதொடர்பாக கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ...

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக 7 மண்டல பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் முக்கிய தளபதியாக இருப்பவர் செந்தில் பாலாஜி, அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த உடன் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து ...

அடையாளம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா ஒரு மின்-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட்டுகள் மேம்பட்ட மின்னணு பாஸ்போர்ட் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் சேவா திட்டம் (PSP) பதிப்பு 2.0 உடன் இணைந்து ஒரு முன்னோடி முயற்சியின் ஒரு பகுதியாக இ-பாஸ்போர்ட் திட்டத்தை செயல்படுத்துவது தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 1, 2024 அன்று செயல்பாட்டுக்கு ...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2024ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இந்தியாவின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏப்.29 ஆம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, உச்சநீதிமன்ற புதிய ...

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை வரவேற்கும் விதமாக திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கினை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் ...