கோவை மே 28 நாமக்கல் மாவட்டம் டி. குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 39) விசைத்தறி உரிமையாளர். இவர் அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க தனது உறவினர்கள் கலையரசு (வயது 50) அருண் (வயது 43) ஆகியோருடன் நேற்று காலை கோவைக்கு வந்தார். பின்னர் அவர் சரவணன் என்பவரது ...

நம் நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வரும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக தொடங்கி உள்ளன. அந்த வகையில் வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் இருந்து 160 வங்கதேசத்தினர் இந்திய விமானப்படை விமானத்தில் திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு கொண்டு சென்று அங்கிருந்து நாடு கடத்தப்படுகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ...

2019 மக்களவைத் தேர்தலின் போது அதிமுக – பாமக கூட்டணி அமைத்தன. கூட்டணி ஒப்பந்தத்தில் பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது என கையெழுத்தானது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அன்புமணி ராமதாஸ், அதிமுக ஆதரவுடன் பாமக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். அன்புமணியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்பட ஆறு எம்.பி.க்களின் ...

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே 3-வது ஆண்டாக போர் நீடித்து வருகிறது.இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கடுமையான போர் தொடர்ந்து வரும் நிலையில் ஒப்பந்தப்படி, இரு நாடுகள் இடையே போர்க்கைதிகள் பரிமாற்றமும் நடந்து வந்தது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை, கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 390 ...

பா.ஜ., சார்பில் நடந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் சென்னை திருவான்மியூரில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசியதாவது: தமிழகம் சித்தர்களின் பூமி. கடவுள் முருகனின் பூமி. தமிழகம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் பூமி. ஒரே நாடு , ஒரே தேர்தல் குறித்து பொய்யான ...

அரக்கோணம்: ​தி​முக​வினர் பொதுக்​கூட்​டம் நடத்தி தன்னை குற்​ற​வாளி​போல் சித்​தரிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி, திமுக முன்​னாள் பிர​முகர் மீது புகார் அளித்த கல்​லூரி மாணவி கண்​ணீர் மல்க வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் அடுத்த பருத்​திப் ​புத்​தூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் பிரீத்​தி(21), கல்​லூரி மாண​வி. இவர் சமீபத்​தில் தனது கணவரும் மற்​றும் முன்​னாள் திமுக அரக்​கோணம் மத்​திய ஒன்​றிய ...

பாகிஸ்தான் : இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார். பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்னை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம் என்று ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ...

சென்னை: தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரமாக உள்ள இடங்களில் அதிக கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட ...

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனையடுத்து பேரிடர் மீட்பு படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகனமழை இருக்கும் பகுதிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் 24 ...

தமிழகத்தில் பான் மசாலா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அவை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படுவதும், கடைகளில் மறைமுகமாக விற்பனைச் செய்யப்படுவதும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்கள் விற்பனைக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ...