தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மேற்கு மண்டலததில் கோவை சரகத்துக்கு (ரேஞ்ச்), உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 33 ...
திமுக அரசு மக்களின் மனங்களை கவர அடுத்தடுத்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை உயர்வு, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்து, தற்போது மாதாந்திர மின் கட்டண முறையில் திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ...
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது முதல் பெண்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த நாட்டின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா கையெழுத்திட்டுள்ள புதிய கிரிமினல் சட்டம் (Penal Code) உலகையே உறைய வைத்துள்ளது. சுமார் 90 பக்கங்கள் கொண்ட அந்தப் புதிய சட்டத்தில், கணவர்கள் தங்கள் மனைவிகளை உடல்ரீதியாகத் தாக்க ...
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பரவலாக மழையைப் பெற்ற தமிழகத்தில்தற்போது கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் தன் வேலையைக் காட்டத் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் வெப்பத்தைத் தணிப்பதற்காக இளநீர், தர்பூசணி போன்றவற்றைத் தேடி வாங்கி உண்கின்றனர். இதனால் கோடைக்காலம் துவங்கும் முன்னரே கோவை பல பகுதிகளில் தர்பூசணி விற்பனை களைகட்டத் துவங்கியுள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் ...
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும் சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மயில்சாமி ...
ருமேனியாவின் நீம்ட் (Neamț) மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 5,000 ஆண்டுகளாக மனிதக் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருந்த பிரம்மாண்டமான கோட்டையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கற்காலத்திலிருந்து (Neolithic) வெண்கலக் காலத்திற்கு (Bronze Age) உலகம் மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தை சேர்ந்த இந்த அமைப்பு, நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடர்ந்த செடி கொடிகளால் ...
தமிழகத்தில் லாரி மற்றும் பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்புக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து, வரும் 25-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ், போக்குவரத்துத் துறையின் ...
புதுடெல்லி: இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) தலைவர் விவேக் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் செய்தித்தாள் காகிதத் தேவை ஆண்டுக்கு 12 லட்சம் டன்னாக உள்ளது.ஆனால், உள்நாட்டில் இதன் உற்பத்தி 5 லட்சம் டன்னை தாண்ட முடியாமல் திணறி வருகிறது. இதன் மூலம் மொத்த செய்தித் தாள் காகிதத்துக்கான தேவையில் 40 சதவீதத்தை மட்டுமே ...
புதுடெல்லி: மத்திய அரசின் அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய பல்துறை அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி) கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது.சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி நிறுவனம் சார்பில் அதிக புரோட்டீன், இரும்புச் சத்து, போலிக்அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச் சத்துகள் அடங்கிய ‘டிசைனர் அரிசி’ ரகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில், சாதாரண அரிசியைவிட ...
ஏ.ஐ டெக்னாலஜி தகவல் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. பல்வேறு துறைகளிலும் ஏ.ஐ பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.அலுவல் பணி மட்டும் இன்றி மருத்துவம், பாதுகாப்புத்துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தாக மாறத்தொடங்கியுள்ளது. ஏ.ஐ தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஏ.ஐ மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023- ஆம் ஆண்டு ...













