பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிக்க வசதியாக ‘கிரேட்டர் பெங்களூர் கவர்னன்ஸ் (திருத்தம்) மசோதா 2025’ என்பது கர்நாடகா சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டது. சட்டசபையில் இந்த மசோதா ஏற்கனவே நிறைவேறிய நிலையில் இன்று கர்நாடகா மேல்சபையில் நிறைவேறியது. இதன்மூலம் பெங்களூர் மாநகராட்சி 5 ஆக பிரிக்கப்படுவது உறுதியாகி உள்ள நிலையில் அதன் பெயர் உள்பட ...

மதுரை: தவெகவின் இரண்டாவது மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக அண்ணா பாதையில் இருந்து விலகிவிட்டதாகச் சாடிய ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக விமர்சித்தார். மேலும், தவெக மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். தவெகவின் 2வது மாநாடு இன்று மதுரையில் ...

இன்று சென்னை மாநகரம் தனது 386-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதில் குறிப்பிட்டதாவது,”எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் ...

பாட்னா: பயங்கரவாதிகள் எவ்வளவு ஆழமாக மறைந்திருந்தாலும், இந்திய ஏவுகணைகள் அவர்களை அழிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகாரின் கயாஜியில் ரூ.13,000 கோடியில் பல்வேறு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கங்கை நதியின் மேல் ரூ.1,870 கோடியில் கட்டப்பட்ட 6 வழிச்சாலை மேம்பாலத்தை மோடி திறந்து வைத்தார். வடக்கு பிஹார்-தெற்கு பீகார் இடையே ...

கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், ” ஸ்மாட் காக்கிஸ்” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும் வகையில் காவலர்களை பணியில் அமர்த்தியுள்ளார். இவர்கள் நேற்று அதிகாலையில் அன்னூர் காவல் நிலையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கரியாம்பாளையம் அருகில் வாகன சோதனை நடத்திய ...

கோவை நஞ்சுண்டாபுரம், ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 54) டீ மாஸ்டர். இவரை கடந்த 24 -ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டி ஒருவர் ரூ 5,150, மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டார்.இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்கு பதிவு செய்து மைல் கல்லை சேர்ந்த ஷாருக்கான் ...

கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவேல் (வயது 53) வியாபாரி. இவர் பெரியநாயக்கன்பாளையம், பேரூராட்சி பகுதியில் வீட்டுமனை ஒன்று வாங்கியிருந்தார். இந்த வீட்டுமனையை வரன் முறைப்படுத்தக் கோரி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் சமீபத்தில் விண்ணப்பத்தி ருந்தார். இதையடுத்து அங்கு பில் கலெக்டராக பணியாற்றி வந்த சதீஷ்குமார் என்பவர் அந்த மனையை உள்ளூர் திட்ட குழுமத்தின் மூலமாக ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் ஜெ. ஜெ. நகரை சேர்ந்தவர் குமார் ,இவரது மகன் ரஞ்சித் (வயது 20) கூலி தொழிலாளி. இவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் நேற்று மதியம் கஞ்சா போதையில் சொக்கம்பாளையம் பகுதியில் சுற்றி திரிந்தார் .அப்போது அவர் அந்த வழியாக வந்த பள்ளி மாணவ – மாணவிகளை ...

கோவை அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் மோட்டார் அறை உள்ளது. அதற்குள் மலைப்பாம்பு ஒன்று நேற்று பதுங்கி இருந்தது .இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் .பின்னர் அவர்கள் அங்கு பதுங்கி இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு முட்டையில் அடைத்தனர். அந்த பாம்பை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக ...

கோவை போத்தனூர் சாய் நகர், ரயில்வே காலனி சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 52) இவரிடம் சாய்பாபா காலனி என்.எஸ் ஆர்.ரோட்டை சேர்ந்த ஸ்ரீகாந்த் அவரது மனைவி மைதிலி ஆகியோர் துடியலூரில் தாங்கள் “பிளாட் “போட்டு விற்பனை செய்வதாகவும், 12 சென்ட் இடம் விற்பனைக்கு இருப்பதாகவும் கூறினார்கள். இதை நம்பி ஷாஜகான் அந்த தம்பதியிடம் 2022-ம் ஆண்டு ...