ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய அன்று, எதிர்பாராத விதமாக குடியரசு துணைத்தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார். தனது உடல்நிலை காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தாலும், இதற்குப் பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், இன்று ...
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயிலில் ஏராளமான பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக எழுந்த புகார்கள், நாட்டையே அதிரவைத்த நிலையில், இந்தப் பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 1995 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலிலில் தூய்மைப் பணியாளராக வேலைபார்த்த ஒருவர், 50-க்கும் மேற்பட்ட ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள் மாணவிகளுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியானது. அதை வெளியிட்ட மாணவியிடம் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியும் ...
கடலூர் மாவட்ட விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 27) வல்லரசு ( வயது 26),குமார் (வயது 25 )இவர்கள் 3 பேரும் நண்பர்கள் .கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நெ. 4 வீரபாண்டியில் ஒரு வீட்டு மாடியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி பூக்கடையில் வேலை செய்து வந்தனர். செல்போன் பரிமாற்றம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ...
கோவை ராமநாதபுரம், சுங்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் சாம்சன் கிஷோர் (வயது 26) ஐஸ்கிரீம் கடை டத்தி வருகிறார். இவரது கடையில் மதுரையை சேர்ந்த விஷால் குமார் ( வயது 20) என்பவர் வேலை செய்து வந்தார். அவர் ஐஸ்கிரீம் விற்ற தொகையை கொடுக்காமல் மோசடி செய்தார். இது பற்றி கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது ...
கோவை ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் ரோட்டில் தி.மு.க கிளை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வமணி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். சப் ...
கோவை மாவட்ட காவல்துறையினர். சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலாம்பூர் பகுதியில் சூலூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசால் ...
மதுரை அத்திகுளத்தைச் சேர்ந்தவர் எழிலரசு இவரது மகன் முகேஷ் குமார் (வயது 23) இவர் கோவை பீளமேடு சித்ரா, அழகு நகர் பகுதியில் தங்கியிருந்து கோவை மாவட்ட கருவூலத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கருவூலத்தில் வருடாந்திர கணக்குகளை சரிபார்த்த போது ரூ.15 லட்சத்து 49 ஆயிரத்து 970 கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை, வ .உ .சி. பூங்கா மைதானத்தில் நேற்று ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக நடைப்பயிற்சி சென்றவர்கள் இதை பார்த்து கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்தவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவரது பெயர் கற்பக ...
கோவை மாவட்டம்,காரமடை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(வயது63). இவர் காரமடை தண்ணீர் பந்தல் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இன்று காரில் அவரது கடைக்கு சென்று விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக தனது காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். அப்போது, காரமடை மேம்பாலத்தின் அருகே திடீரென காரின் இன்ஜினில் இருந்து கரும்புகை வந்தது. ...