கோவை சிவானந்தா காலனி மாசாத்தி அம்மாள் லேஅவுட்டில் கேரள சமாஜ் கட்டிடம் உள்ளது இங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரத்தினபுரி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தில்லை நகர் மணிகண்டன் ( 54 ) வெள்ளலூர் ஜீவா ( 42 ) உக்கடம் முகமது ரபீக் ( 56 ) போத்தனூர் யூசுப் ( 62) குனியமுத்தூர் வில்லியம் குருசாமி ( 61 ) கரும்புக்கடை சாகுல் ஹமீது ( 60 ) கவுண்டம்பாளையம் தணிகாசலம் (60) சிரநாயக்கன்பாளையம் விக்டர் ( 71 | தியாகராஜபுரி வீதி குமார் ( 61 )உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்..
கேரள சமாஜ் கட்டிடத்தில் சீட்டாட்டம் -15 பேர் கைது..!
