கோவை சிறையில் கைதிகள் அறையில் கஞ்சா சிக்கியது.

2 பேர் மீது வழக்கு. கோவை மே 3 கோவை மத்திய சிறையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் உள்ள கைதிகளிடம் கஞ்சா அதிகமாக புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் சிறைத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் சரவணகுமார் தலைமையில் சிறைத்துறை அதிகாரிகள் நேற்றுசிறையில் திடீர் சோதனைநடத்தினார்கள். அப்போதுசிறையில் உள்ள 26 -ஆவது பிரிவு, 8 .வது அ றையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளான பல்லடத்தைச் சேர்ந்த நவுபல் , சித்தோடு ஸ்ரீகாந்த் ஆகியோர் கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நவுபல் , ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..