கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கஞ்சா வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு ஒரு இடத்தில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் சின்னமத்தம்பாளையம் – கண்ணார்பாளையம் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கஞ்சா கடத்தி வந்ததாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சனன் பலதா மகன் பலராம் பலதா(வயது 35) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
கஞ்சா கடத்தல் – வடமாநில வாலிபர் கைது..!






