வேலியே பயிரை மேயலாமா… வியாபாரிகளை மிரட்டி நகை பறித்த இன்ஸ்பெக்டர்.!!

கோவை இடையர் பாளையத்தை சேர்ந்தவர் பால வெங்கடேஷ் ( வயது 50 )நகை வியாபாரி. இவருக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் பணம் – கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பால வெங்கடேஷ் மீது முத்துக்குமார் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பால வெங்கடேஷ் வீட்டுக்கு சென்று நகை பணத்தை எடுத்ததுடன் அவருடைய நகை கடைக்கு சென்று 3 கிலோ நகைகளையும் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. அதுபோன்று மற்றொரு நகை வியாபரிடமும் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நகையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது .இது குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் . இதில் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால் இந்த வழக்கை சி.பி சி.ஐ.டி க்கு மாற்ற வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு கோவை மாநகர காவல் துறை அதிகாரிக்கு சமர்ப்பித்தது . இதையடுத்து இன்ஸ்பெக்டர் மீதான வழக்கை சி.பி.சி.ஐ. டிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் சிபி.சி.ஐ.டி போலீசார் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.