அம்பத்தூர்: சென்னையை அடுத்த கொரட்டூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்தில் கஞ்சா பொ ட்டலம் விற்கப்படுவதாக தகவலின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.தனம்மாள் மற்றும் போலீஸ் படையினருடன் கஞ்சா பொட்டலம் விற்று கொண்டிருந்த வாலிபர் ஒருவனை பிடித்து அவனிடத்தில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவன் போலீஸ் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது இப்பொழுது உள்ள வியாபாரப் போட்டியில் ஒரு கஞ்சா பொட்டலம் விற்றால் ஒரு கஞ்சா பொட்டலம் இலவசமாக கொடுப்பேன். அவனது பெயர் ஜெயபிரகாஷ் வயது 28 தகப்பனார் பெயர் பாஸ்கரன் மெயின் ரோடு வள்ளுவர் குடி சீர்காழி தாலுக்கா மயிலாடுதுறை மாவட்டம் தான் ஆந்திர மாநிலம் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை வாங்கிட்டு வந்தால் கொள்ளை லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளான். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்..
ஒன்று வாங்கினால்.. ஒன்று இலவசம்… ஆஃபரில் கஞ்சா பொட்டலம் விற்ற வாலிபர் கைது..!
