வால்பாறை அட்டகட்டி 16 வது வளைவில் டிப்பர் லாரி மோதி பேருந்து விபத்து-பயணிகள் அலறல்..!

கோவை மாவட்டம் வால்பாறைக்கு வழக்கமாக பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டு வால்பாறைக்கு சென்ற டி.எண்.38. 3051 என்ற எண் கொண்ட பேருந்து அட்டகட்டியில் உள்ள 16 வது கொண்டை ஊசி வளைவிற்கும் 17 வது கொண்ட ஊசி வளவிற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்த போது அங்கு சாலைப் பணி செய்வதற்க்காக ஜல்லி கற்கல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி முன்புறம் நின்றுள்ளது. இதைப்பார்த்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை வழிவிட்டு நிறுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத வகையில் முன்புறம் நின்றிருந்த டிப்பர்லாரி பின்புறமாக வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் முன்புறம் மோதி முன்புறமுள்ள பேருந்து கண்ணாடிகளை உடைத்து தள்ளி விபத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத பேருந்து ஓட்டுனர் அதிர்ச்சியடைந்த நிலையில் அப்பேருந்தில் இருந்த பயணிகள் கத்தி கதறியுள்ளனர். நல்ல வேளையாக விபத்தால் கட்டிடத்தை உடைத்து நின்ற பேருந்து அப்படியே நின்று விட்டதால் பெரும் விபத்திலிருந்து பயணிகள் தப்பியுள்ள நிலையில் அவ்வழியாக சென்ற மற்றொரு பேருந்தில் பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.