தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு துவக்க பள்ளிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது அவ்வகையில் கோவை மாவட்டத்தில் 11 பள்ளிகளிலும் சூலூர் வட்டத்தில் ஐந்து பள்ளிகளிலும் துவக்கப்பட்டது அவ்வகையில் சூலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சூலூர் சிஎஸ்ஐ துவக்கப்பள்ளியில் 42 குழந்தைகளுக்கு இன்று முதல் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், செயல் அலுவலர் சரவணகுமார், பேரூராட்சித் , துணைத் தலைவர் கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சூலூர் திமுக நகர செயலாளர் கௌதமன், பசுமை நிழல் அமைப்பு விஜயகுமார்,சூலூர் வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் முத்துராஜ் பாண்டியன், திமுக நகர நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் என திரளாக கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை துவங்கி வைத்தனர்.