உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக கண்காட்சி..!

நீலகிரி மாவட்டம்: உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 4வது புத்தகத்திருவிழாவினை தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலையில் (24.10.2025)
குத்துவிளக்கேற்றி, புத்தக அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த புத்தக
திருவிழாவில், புத்தக அரங்குகள், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட
கண்காட்சி அரங்குகள், உணவு அரங்கங்கள் என 75க்கும் மேற்பட்ட அரங்குகள்
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் பயன்பெறும்
வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில், அரசு தலைமை கொறடா தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடமும் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்த வேண்டும் என அறிவித்ததின் அடிப்படையில், நீலகிரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 4வது புத்தகத்திருவிழா இன்று முதல் தொடங்கி, வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த புத்தக திருவிழாவில், போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வேறு கதைகள், சொற்பொழிவுகள் உள்ளிட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்கும் வகையில் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு விதமான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும் ஒரே இடமாக இந்த புத்தகத் திருவிழா இடம் பெற்றுள்ளது. ஒவ்வொருக்கும் எது தேவைபடுகிறதோ அந்த புத்தகங்களை வாங்கி படித்து, அதன் மூலம் தங்களது அறிவு திறனை வளர்த்து கொள்ள
முடியும். என்று கூறினார், விழா தொடர்ச்சியாக இலவச கூப்பன்களை வழங்கும் அடையாளமாக 10 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை வழங்கி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மீண்டும் மஞ்சப்பைகளை வழங்கினார்.
முன்னதாக, கலைப்பண்பாட்டு துறையின் சார்பில் ஆண்டவன் குழுவினரால்
நடத்தப்பட்ட மங்கள இசை மற்றும் கோவை மின்னல் கிராமிய கலை குழுவினரால்
நடத்தப்பட்ட தப்பாட்ட நிகழ்ச்சியினை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பிற்பகலில் மதுரை வி.ராமகிருஷ்ணன் அவர்கள் “எண்ணித்துணிக கருமம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.தொடர்ந்து நடைபெறும் புத்தக திருவிழாவில் மரபின் மைந்தன் மா.முத்தைய்யா அவர்கள் “வெற்றி சிறகுகள் விரியட்டும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்கள். பிற்பகல் நடைபெறும் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாதன் அவர்கள் “வாசிப்பு எனும் இறகு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்கள். மேற்கண்ட நிகழ்ச்சிகளை கல்வித்துறையின் சார்பில்
ஒருங்கிணைக்கப்படுகிறது.
இவ்விழாவில், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மாவட்ட வன அலுவலர் கௌதம் (நீலகிரி வனக்கோட்டம்), துணை இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) வித்யாதர் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார்
ஆட்சியர் செல்வி சங்கீதா திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மரு.ஜெயராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர்கள் டினுஅரவிந்த் (உதகை) குணசேகரன் (கூடலூர்), தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் t ஷிபிலா மேரி, சமூக பாதுகாப்பு திட்டம் (தனித்துணை ஆட்சியர்) ராதாகிருஷ்ணன்,மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த்கல்கி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) நந்தகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், உதவி ஆணையர் (கலால் (பொ)) பழனிச்சாமி, உதகை நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி, கூடலூர் நகர மன்ற தலைவர் பரிமளம், உதகை துணைத் தலைவர் ரவிக்குமார், கோத்தகிரி துணைத்தலைவர் உமாநாத் நகராட்சி ஆணையாளர் கணேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், மாவட்ட நூலக அலுவலர் கிளமெண்ட், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கல்வித்துறை ஆசிரியர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் புத்தக கண்காட்சியினை பார்வையிட்டு பல்வேறு புத்தகங்களை வாங்கி சென்றனர் மற்றும் நீலகிரி பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் புத்தகங்களை கண்டு களித்து மிக ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி சென்றனர். இதுபோன்ற புத்தக கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற்றால் தற்போது தலைமுறைகள் செல்போன்கள் டிவி மற்றும் ஆன்லைன் விளையாட்டு கருவிகளுக்கு அடிமையாகி வருவதை தவிர்க்க இதுபோன்ற சிறப்பு புத்தக கண்காட்சிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது வைத்தால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள், மற்றும் தமிழக அரசின் ஏற்பாட்டிற்கு மாணவ மாணவிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்..