ஜம்மு & காஷ்மீர் நேற்று 24 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 61.11% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு ...
லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். லெபனானில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் பேஜர்கள் வெடிப்புகள் நிகழ்ந்த ஒருநாள் கழித்து ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பல வாக்கி டாக்கி சாதனங்களும் வெடித்துள்ளன. இதில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் ...
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றால் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனாலும் முதல்வர் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவைத் ...
பெரம்பூர்: லொக்கேஷனுக்கு வராத ஆத்திரத்தில் பெண் புகார் அளித்ததால் உணவு டெலிவரி வேலையை பகுதிநேரமாக செய்து வந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொளத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் வரலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகன் பவித்திரன் (21), வியாசர்பாடியில் உள்ள ...
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்து வருகின்றனர் இதில் 8000 நிரந்தர தொழிலாளர்களும் பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ...
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜி.டி.பி. மற்றும் தனி நபர் வருமானம் அளவில் தென் இந்தியா உயர்ந்துள்ளதும், மேற்குவங்கம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தென் மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாகியிருப்பதும், தனிநபர் வருமானத்தில் தேசிய சராசரியைவிட உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. ...
கோவை ராமநாதபுரம், ,80 அடி ரோடு, காவேரி நகரில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மனைவி கோவிந்தம்மாள் ( வயது 49) இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர். நேற்று இவர் சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் முதல் மாடியில் நின்று பெயிண்ட் அடித்துக் ...
கோவை உக்கடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா நேற்று டவுன்ஹால் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் அப்போது அங்குள்ள பி. எட் .பெண்கள் பயிற்சி கல்லூரி எதிர்புறம் ஒரு பெட்டிக்கடையில் பீடி, சிகரெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 148 சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்பாக அதை விற்பனை செய்து வந்த ஒண்டிப்புதூர் ...
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேரன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 71) சம்பவத்தன்று இவர் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் ஒட்டி வந்த பதிவு எண் பெறாத இ.பைக் இவர் மீது மோதியது .இதில் சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலன் .இவரது மனைவி இம்மி பியூலா (வயது 45 )இவள் நேற்று உக்கடம் என்.எச் ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் எந்திரத்தில் கோளாறு உள்ளது. நான் உங்களுக்கு பணம் எடுத்து தருகிறேன் என்று ...













