தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி வார இறுதி நாட்கள் மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என்று தொடர் விடுமுறை வருவதால் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களுக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்ய இருப்பதால் ...
போலந்தில் இருந்து ரெயில் மூலம் உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.உக்ரைனுடன் கடந்த 1992ம் ஆண்டு முதல் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகிறது. அந்த நாடு மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. 2½ ஆண்டுகளை கடந்து நீடித்து ...
கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளின் வழக்கை 15 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அவசர கடிதம் எழுதியுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் ...
ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்… தமிழக இந்து சமயஅறநியைத்துறை சார்பில் பழனியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற வந்த நிலையில், பழனி முருகன் கோவில் உள்பட முக்கிய இடங்கள் ...
கடந்த 17.8.2024 ஆம் தேதி மதியம் 1.50 மணிக்கு முகுந்த ராயபுரம் ரயில் நிலையத்திற்கும் திருவலம் ரயில் நிலையத்திற்கும் இடையில் தண்ட வாளத்தின் மீது 9 அடி நீளமுள்ள இரும்பு துண்டு மற்றும் கல்லை மர்ம நபர்கள் வைத்துச் சென்றது தொடர்பாக முகுந்த ராயபுரம் ரயில் நிலைய அதிகாரி கொடுத்த புகாரை பெற்று காட்பாடி ரயில்வே ...
திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்டஇளநிலை பொறியாளர் அலுவலகத்தில் சந்திராபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 39) என்பவர் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக உள்ள கந்தசாமி என்பவர் ரூ 1கோடி 59 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை எடுத்துள்ளார்.. பணியை முடித்து கொடுத்ததும் பொறியாளர் குழுவினர் பார்வையிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர். ...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டி.எஸ்.பி. யாக பணிபுரிந்து வந்தவர் கலையரசன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டி.எஸ்.பி . யாக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக தாராபுரம் சப் டிவிஷன் புதிய போலீஸ் துணை சூப்பிரண்டாக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி கமிஷனராக பணியாற்றினார். ...
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் “ட்ரோன் “இயக்குவது குறித்த கண்காணிப்பு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் இது நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் “ட்ரோன்” காமிரா இயக்குவது , கண்காணிப்பது எப்படி? அதற்கான விதிமுறைகள் என்ன? என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள அப்பநாயக்கன்பட்டி, செலக்கரிச்சல் ரோட்டில் செயல்படாத இரும்பு தொழிற்சாலை உள்ளது . இந்த தொழிற்சாலையில் உள்ள இரும்புகளை திருடுவதற்கு நேற்று முன்தினம் சேலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 27) சரவணன், முத்து ஆகிய 3 பேர் சென்றனர் . அப்போது முத்து மற்றும் சரவணன் ஆகியோர் தொழிற்சாலையின் சுற்றுச் ...
ஒடிசாவை சேர்ந்தவர் சுகன். இவரது மனைவி சுகன்யா (வயது 22) அன்னூர், மேட்டுப்பாளையம், அருணா நகரில் உள்ள மில் குடியிருப்பில் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் சுகன்யா யாரிடமோ நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் . இதை அவரது கணவர் சுகன் கண்டித்தார் . இதனால் மனம் உடைந்த சுகன்யா நேற்று முன்தினம் மாலையில் ...













