கோவை பெரிய கடை வீதியில் “சிம்கோ ” என்ற துணிக்கடை . இது அடுக்குமாடி கட்டிடம் ஆகும். இதன் ஒரு பகுதியில் செருப்பு கடையும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 11:30 மணியளவில் கட்டிடத்தின் 3-வது மாடியில் மின் கசிவால் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிகளில் பற்றிய தீ மளமளவென பரவியது ...

கரூர்: தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அருணா ஜெகதீசன் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் ...

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. அந்த பிரிவில் டி.எஸ்.பியாக பணியாற்றிய காதர் பாட்ஷா, மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகையை ...

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை குறிவைத்து வரி விதித்துள்ளார். மேலும் நம் நாட்டில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றுவோரை தடுக்கும் வகையில் எச் 1பி விசாவின் கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிகரித்துள்ளார். இதனால் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப்புக்கு மாற்றாக பார்க்கப்படும் ...

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த ...

சென்னை: தமிழில் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்துக்கு பிறகு புதிய படத்தில் நடிக்காத அஜித் குமார், தற்போது கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற தனது அணியின் மூலம் துபாய், பெல்ஜியம் உள்பட பல நாடுகளில் நடக்கும் முக்கிய கார் பந்தயங்களில் பங்கேற்றார். இதில் அவரது அணி ...

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 82 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் ...

டெல்லி: ஆசிய கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மைதானத்திலும் ஆபரேஷன் சிந்தூர் என்று பிரதமர் மோடி பதிவிட்டு இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ...

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தையொட்டிய எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கிரண் செக்டாரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான நபா்களின் நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரா்கள் கண்காணிப்பை அதிகப்படுத்தினா். அப்போது, ...

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலைவர்கள் பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூர் செல்கிறார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார். கரூரில் ...