திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை கொடுக்க மறுக்கும் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி முன் தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் தரைக்கடை வியாபார சங்கத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் திருச்சி மாநகராட்சி மேயரிடம் இது குறித்து மனு கொடுக்கப்பட்டது .. ...
நீலகிரி மாவட்ட உதகை 34 வது வார்டு எச் எம் டி தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் ஆயிரத்துக்கும் மேலான குடும்பங்கள் வசிக்கின்றனர், அன்றாட வீட்டு உபயோக குப்பைகளை தினந்தோறும் சாலை ஓரத்தில் கொட்டுவதால் குப்பைகள் சிதறி கிடப்பதோடு ஈக்கள் கொசுக்கள் அதிகமாகின்றன இந்த இடம் மக்கள் அதிகமாக நடக்கக்கூடிய சாலை என்பதையும் உணராமல் குப்பைகளை அப்படியே ...
கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு ,கெம்பனூர் சுற்றுக்குட்பட்ட அட்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் பேகன் (வயது 30 )இவர் இன்று காலையில் அந்த பகுதியில் காலைகடன் கழிக்க சென்றார். அப்போதுஅங்கு மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானை இவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பேகன் அதே இடத்தில் பலியானார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வடவள்ளி யை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது கணவருடன் வந்தார். பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 5 ஆண்டுகளாக திமுக 40 வது வார்டு செயலாளர் கதிரேசன் என்பவரின் வீட்டில் குடும்ப சூழலை ...
கோவை செல்வபுரம், குமாரபாளையம், சாஸ்தா நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு ரூ5 லட்சம் கடன் கொடுத்திருந்தார்.அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். அதைக் கேட்ட போது ஆத்திரமடைந்த பாண்டியன் அரிவாளால்மனோகரனின் தலையில் வெட்டினார் .இதில் அவருக்கு பலத்த ...
கோவை துடியலூர் என்.ஜி.ஜி ஒ காலனி, கணேஷ் நகரை சேர்ந்தவர் பூபதி. இவரதுமனைவி மகேஸ்வரி (வயது 24) இவர் கடந்த 11ஆம் தேதி அவரது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் பூபதி துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். கோவை துடியலூர் முத்து நகரை சேர்ந்தவர் ...
சிபிஐ வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் ஏற்கனவே செயலில் இருந்த மதுபான கொள்கையை மாற்றி புதிய மதுபான கொள்கையை ஆளும் ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்தது. இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அமலாக்க துறை முதலில் வழக்கு பதிவு ...
டெல்லி: ஜி.எஸ்.டி. வரி பற்றி கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஆணவப் போக்குடன் அவமதிக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கோடீஸ்வர நண்பர்களுக்காக விதிகளை மாற்றி சிவப்பு கம்பளம் விரிக்கிறது மோடி அரசு. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்கள் கேள்வி எழுப்பினால் அவமதிக்கிறார்கள். வரிவிதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என சிறு, குறு ...
தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மதுவிலக்கு மாநாடு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த மாநாடு நடக்க உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, எல்லையில் 10 அடி நீள குகையில் பதுக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். ஜம்மு – காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதனால் பல்வேறு ...













