டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி 1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிறந்தார். வடகிழக்கு குஜராத்தில் உள்ள வாட்நகரில் பிறந்து வளர்ந்த மோதி, அங்கு இடைநிலைக் கல்வியை முடித்தார். 1978 ஆம் ஆண்டில் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்த கற்றல் பள்ளியில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1983 இல், ...
கோவை நகரின் மைய பகுதியான பெரியகடைவீதி, மணி கூண்டு அருகில் பாரம்பரிய கைவினை கலைஞர்கள் உருவாக்கிய கலை பொருட்கள் விற்கும்,பூம்புகார் கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளது, இது தமிழ்நாடு அரசின் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் சார்பில் நிர்வாகிக்கபடுகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் இரண்டாவது பெரும் பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை நிலையமாக உள்ளது இங்கே ...
2001 இல் நிகழ்ந்த 9/11 தாக்குதலின் மூளையாக இருந்த ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் ஹம்சா பின்லேடனின் நிலை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. சில தகவல்களின்படி, ஹம்சா இன்னும் உயிருடன் இருப்பதாகவும், அல்-கொய்தாவின் புதிய தலைவராக உருவெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் எதிர்ப்பு குழுக்களின் கூற்றுப்படி, ஹம்சா பின்லேடன் தற்போது ...
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டனர். பெரியாரின் பிறந்த நாளான செப். 17, சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தார். அன்றைய நாள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ...
புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று (திங்கள்) சந்திக்க உள்ளார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா இன்று சந்தித்துப் பேசுவார்கள். முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக கெஜ்ரிவால் ...
*12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள கெங்கமுடி அருகே பிக்கப்பதிமந்து பகுதியில் மலைச்சரிவில் பல இடங்களில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற குறிஞ்சி மலர், மலைகளில் பூக்கக்கூடியவை. இந்த வகையான மலர்கள் ஒரு மாதம், 3 மாதம், 6 மாதம், ஆண்டிற்கு ஒரு முறை, ...
ஈரோடு : ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் சொசைட்டிகளில் கொப்பரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்ட விளைப்பொருள்களில் முக்கிய இடம் பிடித்திருப்பது தேங்காய். தற்போது மாவட்ட அளவில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதேநேரம், வட மாநிலங்களில் தேங்காயின் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், கொப்பரை தேங்காய் எண்ணெய் உற்பத்தி, மருத்துவ பயன்பாட்டுக்கு ...
சென்னை: ‘திமுக – விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம். ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற எனது பேச்சு பற்றி முதல்வர் எதுவும் கேட்கவில்லை’ என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். ...
ஒடிசா ஆந்திரா மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. டி.எஸ்.பி. ஜெயராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் குமரேஷ்,சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் கோவை ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஓடிசா ஆந்திரா வழியாக கோவைக்கு வந்த ...
கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து குதித்து இன்று காலையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் பெயர் சிவகண்டன் என்பதும், இவர் கடலூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி என்றும் தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இவரது உடல் பிரேத ...













