புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் உயர்தலைவரும் இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி இன்று (செப்.16) மாலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இஸ்லாமிய சமுதாயத்தின் தனித்துவ அடையாளத்தை அலட்சியப்படுத்த எதிரிகல் முயற்சித்து வருகின்றனர். மியான்மர், காசா, இந்தியா ...
கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 73 ) இவர் நேற்று சுந்தராபுரம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வந்த எலக்ட்ரிக் ஆட்டோ இவர் மீது மோதியது. இதில் மாரியப்பன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் ...
மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில். தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் “சமூக நீதி” நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கழக தலைவர் அவர்கள் அறிவித்தற்கிணங்க மறைந்த தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் ஆன 17.09.24 இன்று மாநகர செயலாளரும் மண்டல தலைவருமான ...
கோவை கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்தவர் செரின் (வயது 32) இவரை மதுக்கரை மரப்பாலம் நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த ரபீக் ( வயது 35) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 பவுன் நகையும், ரு. 80 ஆயிரம் பணமும் வாங்கினாராம். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து செரின் கரும்புக்கடை போலீசில் புகார் ...
கோவை அருகே உள்ள வடவள்ளி எம்.ஜி . காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 50 ) பிகாம் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். உடல்நல குறைவு காரணமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிலிருந்து வந்தார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது . அதில் ஒரு பிரபல நிறுவனத்தில் முதலீடு ...
சென்னை, அம்பத்தூர், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 70) இவரது பேரன் இக்சிட் (வயது 7) இந்த சிறுவன் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தான். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ஆர் எஸ் புரம் , ராபர்ட்சன் ரோட்டில் உள்ள அஜய் நீரோ கிளினிக் என்ற மருத்துவமனைக்கு ராமச்சந்திரன் தனது பேரனை அழைத்து வந்திருந்தார். ...
கோவை குனியமுத்தூர், ரைஸ் மில் ரோட்டில் கடந்த 9-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் குனியமுத்தூர் இந்து முன்னணி தலைவர் பிரபாகரன் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசினாராம் .இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் அழகு மாரி செல்வம் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ...
தூத்துக்குடி மாவட்டம், கருவேலம்பாடு,மேல தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 58) இவர்திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருப்பூர் பெருமாநல்லூரில் வசிக்கும் தனது மகள் புஷ்பலதா வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவபெருமாளும், அவரது தம்பி வெள்ள துரையும் மது அருந்தினார்களாம். பின்னர் பெத்தநாயக்கன்பாளையம்,கீர்த்தி நகரில் உள்ள உறவினர்வீட்டில் படுத்து ...
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவை சேர்ந்தவர் மலையரசன் .இவரது மகள் தரணிஸ்ரீ (வயது 9) ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார் .இவர்கள் தங்கள் ஊரைச் சேர்ந்த 42 பேருடன் ஆன்மீக சுற்றுலாவாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்தனர். அவர்கள் 2 மினி பஸ்களில் கடந்த 14ஆம் தேதி இரவு சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு ...
கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை சரகத்தில் போலீசில் ஆன்லைன் மூலமாகவும் புகார் பெற்று பதிவு செய்யப்படுகிறது. பின்னர் இன்ஸ்பெக்டரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. தமிழக போலீசில் குற்றம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பாக சி .சி. டி. என். எஸ். இணையதளத்தில் புகார் மனுக்களை பதிவு செய்ய முடியும். ...













