சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்ததால் பெரும்பாலான மக்கள் தமிழ்நாடு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்றும் நாளையும் சென்னை முழுவதும் இருக்கக்கூடிய அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கனமழை காலத்தில் சென்னை ...
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்கள் மழை எச்சரிக்கையால் இந்த முறை கிரிவலம் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கனமழை எச்சரிக்கையால் வெளி மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக புகழ் பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். மேலும் பவுர்ணமி கிரிவலம் ...
ஸ்ரீநகர்: காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்கிறார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கேற்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டும் கூட காங்கிரஸ் அதனைப் புறக்கணித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இன்றைய பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ...
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தென்மேற்குப் பருவமழை இந்திய பகுதிகளில் நேற்று (அக். 15) நிறைவு பெற்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த ...
சென்னை: சென்னையில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள் என்றும், அரசின் துரித நடவடிக்கையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்துள்ளது என்றும் சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும், குறை சொல்பவர்கள் குற்றம் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். களத்தில் இறங்கி பணி செய்பவர்களைத்தான் பொதுமக்கள் அங்கீகரிப்பார்கள் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர ...
பல ஆயிரம் வைரங்களை பதித்து உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா புகைப்படம் இன்ஸ்டாகிரா மில் வைரலாகி அது பல லட்சம் இணையவாசிகளின் இதயங்களை வென்று சாதனை படைத்து உள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேரந்த வைர வியாபாரி ஒருவர் ரத்தன் டாடா மீது பேரன்பு கொண்டவர். ரத்தன் டாடா மறைவுக்கு தனித்துவமான முறையில் அஞ்சலி செலுத்த ...
பெங்களூர்: இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமான மசூதிக்குள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையை புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், மசூதியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டது தொடர்பாக 2 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் கர்நாடக ஹைகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ...
கோவையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளுக்கு மழை நீர் புகுந்தது .மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்தால் நொய்யல் ஆற்றில் 300 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அந்த ஆற்றில் உள்ள முதல் தடுப்பணையான ...
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பக்கம் உள்ள வெட்டி வயல் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் என்ற சிவா ( வயது 24 ) இவர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வெள்ளலூர் ரைஸ் மில் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரு பெண்கள் ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று கே. கே .புதூர் மாநகராட்சி பள்ளிக்கூடம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள விநாயகர் கோவில் அருகே அனுமதி பெறாமல் ஒருவர் பிளக்ஸ் போர்டு வைத்துக் கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த அருண் சத்யா ...













