கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா,போதை மாத்திரை, புகையிலை பொருட்கள் கடத்தல் தடுப்பு வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சாகடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீசார்அங்குள்ள செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது ...

கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த் ஆரோக்கியராஜ். இவர் திருச்சி ,ஸ்ரீரங்கம் உதவி கமிஷனராக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக போத்தனூர் சரக உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மணிவர்மன் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்களிடம் வாழ்த்து பெற்றார்.இவருக்கு இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 45 வது ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது . அதைத் தொடர்ந்து மாலை ஸ்ரீ ராஜ கணபதி ஆலயத்திலிருந்து தீர்த்தக் குடங்கள் எடுத்து ஸ்ரீ மகாசக்தி காளியம்மன், ஸ்ரீ ...

டெல்லி: தமிழ் ரசிகர்களால் இசைஞானி என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்துவருகிறார். இதற்கிடையே தன்னுடைய பாடல்களை படங்களில் பயன்படுத்துவதை அவர் சமீப காலமாக விரும்புவதில்லை. அதற்காக நீதிமன்றமும் சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடலின் காப்புரிமை அவருக்கு ...

உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 மிகவும் விவாதத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் பலர் மகா கும்பமேளாவை காண வருகிறார்கள். இது தவிர பாலிவுட் முதல் தொலைக்காட்சி வரை பல பிரபலங்களும் மகா கும்பமேளாவில் நீராடியுள்ளனர். அதேபோல் இந்த மகா கும்பமேளாவில் பல சாமியர்களும், மகான்களும் ...

சமீபகாலமாக பிரதமர் மோடிக்கு பெண் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு வழங்கி வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த பெண் அதிகாரி யார் என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலித்தது. இதுகுறித்து முன்னணி ஊடகங்கள் புலன் விசாரணை நடத்தி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்தது சிஆர்பிஎப் படையை சேர்ந்த பெண் அதிகாரி பூனம் ...

திருப்பதி -திருமலையில் அன்னமைய்யா பவனில் திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜனவரி 4ம் தேதி திருமலையில் மிக சிறப்பாக ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து ...

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் பஷீர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நான் டீக்கடை வைத்து நடத்தி வருகிறேன். போலீசார் இரவு 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என வற்புறுத்துகின்றனர். எனவே அதற்குப் பிறகும் டீக்கடையை தொடர்ந்து நடத்த அனுமதி வேண்டும் என வலியுறுத்தி அவர் ...

மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்த சினிமா தயாரிப்பாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஏ.எம்.சௌத்ரி தேவர். இவர் சினிமா தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக ...

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முனிசிபல்சத்திரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக சீமான் மீது புகார் எழுந்தது. பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரில் சீமான், நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு ...