என்ன அழகு! கும்பமேளாவில் அனைவரையும் ஈர்த்த கண்ணழகி… மோனாலிசாவுக்கு வந்த பட வாய்ப்பு.!!

த்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 மிகவும் விவாதத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது.

மேலும் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் பலர் மகா கும்பமேளாவை காண வருகிறார்கள். இது தவிர பாலிவுட் முதல் தொலைக்காட்சி வரை பல பிரபலங்களும் மகா கும்பமேளாவில் நீராடியுள்ளனர். அதேபோல் இந்த மகா கும்பமேளாவில் பல சாமியர்களும், மகான்களும் பங்கேற்று உள்ளனர்.அதாவது, கும்பமேளாவில் எப்போதுமே கோடிக்கணக்கான மக்கள் திரள்வார்கள். இம்முறை உலககெங்கிலும் இருந்து 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு பெரிய கூட்டத்தில் யாராவது ஒருவர் காணாமல் போனால் தேடி கண்டுபிடிப்பது சிரமமான காரியம். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு நடுவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் முறை குறிஞ்சி பூ போல் தோன்றிய மோனலிசா இணையத்தில் வைரலாகி வருகிறார்.கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு நடுவே மோனலிசா என்ற இளம்பெண் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நடிகர் ராஜ்குமார் ராவின் சகோதரர் அமித் ராவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் தேடிவந்துள்ளது.ராஜஸ்தானை சேர்ந்தவரான மோனலிசா ருத்ராட்சம், பாசிமணி விற்பதற்காக கும்பமேளாவில் குடும்பத்தினரோடு கடை போட்டுள்ளார். 16 வயதில் வசீகரிக்கும் தோற்றத்தில், அவரது கவர்ச்சியான கருவிழி, மாநிறத்துடன் கொண்ட முக அழகு ஆகியவற்றை வர்ணித்து வருகின்றனர்.

மோனலிசாவின் புகைப்படத்திற்கு இணையத்தில் ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிகின்றன. அவரிடம் பூக்கள், மணிகள் வாங்குவதை விட செல்பி எடுத்து கொள்வதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் சொல்லப் போனால் உலகப் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாக திகழும் மோனாலிசா ஓவியத்துடன் ஒப்பிட்டு பேசி வருவது கவனிக்கத்தக்கது.இந்தநிலையில், பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது புதிய படத்தில் மோனலிசாவை நாயகியாக நடிக்கவைக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் இதற்காக மோனலிசாவின் கிராமத்துக்கு சென்று அவரை சந்தித்துள்ளார் சனோஜ். அதாவது, நடிகர் ராஜ்குமார் ராவின் சகோதரர் அமித் ராவ் கதாநாயகனுக்கு ஜோடியாக மோனாலிசா நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கி மார்ச் அல்லது ஏப்ரலில் முடிவடையும்.ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது