கோவா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக 140 இடங்களில் அபார வெற்றி – பிரதமர் பிரமோத் சாவந்த் தகவல்..!

கோவா பஞ்சாயத்து தேர்தலில் எந்த கட்சியும் செய்யாததை பாஜக செய்து, வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

கோவா பஞ்சாயத்து தேர்தலில் மொத்தமுள்ள 186 இடங்களில் பாஜக 140 இடங்களில் வெற்றி பெற்றதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். சட்டசபை, லோக்சபா மற்றும் இப்போது பஞ்சாயத்து தேர்தல்களை மாற்றியுள்ளோம், இது எங்கள் பணியை காட்டுகிறது என்றும் மத்திய அரசு அதைப் பாராட்டும் என்று நான் நம்புகிறேன், எனவும் முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே கூறுகையில், கோவா பஞ்சாயத்து தேர்தலில் எந்த கட்சியும் இவ்வளவு இடங்களில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இது பாஜகவின் வரலாற்று வெற்றி என்று கூறினார். கோவாவில் 186 பஞ்சாயத்து அமைப்புகளுக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. கோவாவில் பஞ்சாயத்து தேர்தலில் 78.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன