பா.ஜ.க மகளிர் அணி கூட்டம்: கோவையில் நடைபெற்றது
பா.ஜ.க கோவை மாநகர், மாவட்ட மகளிர் அணி கூட்டம் கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அரசியலில் பெண்கள் தன்னம்பிக்கை உடனும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை பொதுமக்களை தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனையான தெரு விளக்கு சாக்கடை கழிவுநீர் பிரச்சனை, குடிநீர், சாலை பிரச்சனை, தோறும் உள்ள குப்பை தூய்மைப்படுத்துவது குறித்து புகார் அளித்தால் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் நமது கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடனடி தீர்வை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் வீதி தோறும் மகளிரை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவி ஜெயஸ்ரீ மற்றும் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Leave a Reply